மீலாது நபியை முன்னிட்டு அமீரகத்தில் அரசுத்துறை ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீலாது நபி எனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 21 ம் தேதி விடுமுறை என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மீலாது நபி வியாழக்கிழமை என்பதால் பொதுத்துறை ஊழியர்கள் நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களைப் பெறுவார்கள் என கூறப்படுகிறது.

பொதுத்துறை ஊழியர்களுக்கு இம்மாத இறுதியில் வியாழன், வெள்ளி, சனி என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்றும் அக்டோபர் 24, ஞாயிற்றுக்கிழமை முதல் ஊழியர்கள் மீண்டும் தங்களின் பணிக்குத் திரும்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அமீரகத்தில் தனியார்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அரசுத்துறை போலவே விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால் தனியார் துறைக்கும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து இந்த வருடத்தின் கடைசி நீண்ட நாள் விடுமுறையானது, டிசம்பர் 1 புதன்கிழமை முதல் டிசம்பர் 4 சனிக்கிழமை வரை அமீரக தியாகிகள் நினைவு நாள் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தன்று கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.