ஓமானில் கொரோனாவிற்கான தடுப்பூசியினை மக்களுக்கு தொடர்ந்து உத்வேகத்துடன் வழங்கி வரும் நிலையில், மஸ்கட் கவர்னரேட்டில் வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக சிப்லத் முத்ரா திறக்கப்படும் என தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 28, 2021 வியாழக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு மஸ்கட் கவர்னரேட்டில் வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போட சிப்லாட் முத்ரா திறக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மஸ்கட் கவர்னரேட்டில் உள்ள சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஒரு அறிக்கையில், “மஸ்கட் கவர்னரேட்டில் வெளிநாட்டினருக்கான தடுப்பூசி பிரச்சாரம் தொடர்கிறது என்பதையும், சிப்லாத் முத்ரா வியாழக்கிழமை, அக்டோபர் 28, 2021 முதல் அக்டோபர் 30, 2021 சனிக்கிழமை வரை மூன்று நாட்களுக்குத் திறக்கப்படும் என்பதையும் நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்”.
“Tarassud+ செயலி அல்லது Covid19.moh.gov.om என்ற இணைப்பின் மூலம் தடுப்பூசிக்கான அப்பாய்மெண்டை பதிவுசெய்தவர்கள் தடுப்பூசி போட செல்லும் போது ரெசிடென்ஸ் அட்டை அல்லது பாஸ்போர்ட்டைக் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.