ADVERTISEMENT

துபாய்: Covid19 தடுப்பூசியின் இரு டோஸினை போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் சேவை..!! DHA தகவல்..!!

Published: 30 Nov 2021, 1:44 PM |
Updated: 30 Nov 2021, 1:54 PM |
Posted By: admin

துபாய் சுகாதார ஆணையம் (DHA) 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் ஃபைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிகளுக்கான பூஸ்டர் டோஸினை அறிவித்துள்ளது. முன்னதாக குறிப்பிட்ட குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதே போல் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகமும் ஃபைசர்-பயோஎன்டெக், ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிகளுக்கான பூஸ்டர் டோஸினை போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ்களை எடுத்துக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இருப்பினும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்வதற்கு அப்பாய்மெண்ட் செய்வது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான முன்பதிவினை DHA app அல்லது 800342 ஐ தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT