ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் செவ்வாயன்று ட்விட்டரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
அதில் கூறியுள்ளதன்படி எக்ஸ்போ 2020 துபாயில் ஷேக் முகம்மது அவர்களின் தலைமையில் ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
அதில் ஓய்வு பெற்ற வெளிநாட்டவருக்கு (retired expats) ரெசிடென்ஸ் விசா வழங்குவதற்கான நிபந்தனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதன் கீழ் வெளிநாட்டவர்கள் ஓய்வு பெற்ற பிறகு இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கலாம். இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் ஐக்கிய அரபு அமீரக சாலைகளில் ஓட்டுநர் இல்லாமலேயே சுயமாக ஓட்டும் வாகனங்களை (selfdriving vehicle) சோதனை செய்ய உள்துறை அமைச்சகம் சமர்ப்பித்த முன்மொழிவுக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.