ADVERTISEMENT

தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை படைத்த அமீரகம்..!! தகுதியானவர்கள் அனைவருக்கும் முதல் டோஸ் நிறைவு..!!

Published: 28 Nov 2021, 10:29 AM |
Updated: 28 Nov 2021, 10:55 AM |
Posted By: admin

கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் தற்பொழுது ஒரு முக்கிய சாதனையை எட்டியுள்ளது. அமீரகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தகுதியான மக்கள் தொகையில் 100 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து இந்த குறிப்பிடத்தக்க சாதனையை எட்டிய பிரிட்டனின் வெளிநாட்டுப் பிரதேசமான ஜிப்ரால்டரை அடுத்து அமீரகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அவர் வேர்ல்ட் இன் டேட்டாவின் படி, ஜிப்ரால்டரில் ஒரு டோஸ் பெற்றவர்களின் பங்கு 120 சதவீதம் மற்றும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்கள் தொகை 118 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 9.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், ஜிப்ரால்டரின் மக்கள்தொகை வெறும் 33,000 மட்டுமே ஆகும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.

ADVERTISEMENT

கோவிட்-19 தடுப்பூசி உலகளவில் முதன் முறையாக மக்களுக்கு வெளியிடப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் தனது குடியிருப்பாளர்களுக்கும் குடிமக்களுக்கும் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி மூலம் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி விநியோகிக்க ஆரம்பித்து. இதனையொட்டி இலவசமாக மக்களுக்கு தடுப்பூசி வழங்க ஆரம்பித்ததில் அமீரகம் உலகின் முதல் நாடுகளில் ஒன்றாகும்.

ஆரம்பத்திலிருந்தே தடுப்பூசி பயன்பாட்டிற்கான வளர்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகம் பங்களித்து வருகிறது. சினோஃபார்மின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் சுகாதார அமைச்சகம் பங்கேற்றது. நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 1,000 தன்னார்வலர்கள் உட்பட சுமார் 31,000 தன்னார்வலர்கள் இந்த சோதனைகளில் பங்கேற்றனர். மற்ற நாடுகளைப் போலவே, எதிர்பாராத பக்க விளைவுகள் எதுவும் கண்டறியப்படாததால், சோதனைகள் நடந்துகொண்டிருந்தபோதே, ​​​​அமீரகம் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டை ஆரம்பத்தில் அங்கீகரித்தது.

ADVERTISEMENT

2020 செப்டம்பரின் மத்தியில் முதன்முதலில் அமீரகத்தின் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி பெற்றனர்.

துபாய் அதிகாரிகள் 2020 டிசம்பரில் அமீரகத்தில் வசிப்பவர்களுக்காக Pfizer-BioNTech என்ற தடுப்பூசியை முதன்முதலில் அங்கீகரித்தனர். பின்னர், அமீரக அதிகாரிகள் ரஷ்யாவின் Sputnik V, UK-வின் Oxford-AstraZeneca மற்றும் அமெரிக்காவின் மாடர்னா போன்றவற்றையும் பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு அங்கீகரித்தனர். கூடுதலாக, சினோபார்ம் மற்றும் ஃபைசர் குழந்தைகளுக்காக தற்பொழுது அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசியைப் பெற்ற முதல் நபர்களில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர்கள் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரும் முன்னணியில் இருந்து வழிநடத்தினர்.

மேலும், மற்ற எமிரேட்களின் ஆட்சியாளர்கள் மற்றும் அமைச்சர்களும் இந்த முயற்சியில் சேர்ந்து குடியிருப்பவர்களை தடுப்பூசி பெற ஊக்குவித்தனர். இதில் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சரான ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரான லெப்டினன்ட்-ஜெனரல் ஷேக் சைஃப் பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சரான அப்துல் ரஹ்மான் பின் முகமது அல் ஓவைஸ் ஆகியோரும் இதில் அடங்குவர்.

பின்னர், தடுப்பூசி இளம் வயதினருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்ட பிறகு அவர்களுக்கும் அங்கீகரிக்கப்பட்டது. மார்ச் 2021 இல், கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்பை அறிவித்த பிராந்தியத்தில் முதல் நாடாக அமீரகம் உருவானது.

அபுதாபியை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான குரூப் 42 (G42) ஐக்கிய அரபு அமீரகத்தில் தடுப்பூசியை உருவாக்க சீன மருந்து நிறுவனமான சினோபார்முடன் இணைந்துள்ளது. ராஸ் அல் கைமாவை தளமாகக் கொண்ட Gulf Pharmaceutical Industries (Julphar) Hayat-Vax தடுப்பூசியை தயாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.