ADVERTISEMENT

கத்தாரில் முதன் முறையாக பரவிய ஒமிக்ரான் வைரஸ்… நான்கு பேருக்கு பாதிப்பு என சுகாதார அமைச்சகம் தகவல்…!!

Published: 18 Dec 2021, 10:48 AM |
Updated: 18 Dec 2021, 11:27 AM |
Posted By: admin

கத்தாரில் முதன் முறையாக ஒமிக்ரான் வைரஸ் தொற்றானது பதிவாகி இருப்பதாக கத்தாரின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

புதிதாக ஒமிக்ரான் தொற்று நான்கு பேருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் வெளிநாடுகளில் இருந்து கத்தார் பயணித்தவர்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றது.

பாதித்தவர்களில் கத்தார் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு குடியிருப்பாளர்களும் அடங்குவர். தற்பொழுது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

ADVERTISEMENT

இதற்கு முன்னர் மற்ற வளைகுடா நாடுகளான சவூதி, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமான் ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.