ADVERTISEMENT

அபுதாபி சிட்டிக்குள் டிரக், லேபர் பஸ் செல்ல 24 மணி நேர தடை..!! புத்தாண்டை முன்னிட்டு ITC நடவடிக்கை…!!

Published: 29 Dec 2021, 1:41 PM |
Updated: 29 Dec 2021, 2:30 PM |
Posted By: admin

புத்தாண்டு தினத்தன்று அபுதாபி நகருக்குள் டிரக்குகள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் 50 இருக்கைகள் கொண்ட பேருந்துகள் இயக்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக அபுதாபியின் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பில் அபுதாபி சிட்டிக்கு செல்ல உதவும் நான்கு பாலங்களான ஷேக் சையத் பிரிட்ஜ், ஷேக் கலீஃபா பிரிட்ஜ், மக்தா பிரிட்ஜ் மற்றும் முஸாஃபா பிரிட்ஜ் ஆகிய பகுதிகளுக்கு லாரிகள் மற்றும் தொழிலாளர் பேருந்துகள் நுழைய அனுமதிக்கப்படாது என ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் தெரிவித்துள்ளது.

இந்த 24 மணிநேரக் கட்டுப்பாடு டிசம்பர் 31 வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் ஜனவரி 1, 2022 சனிக்கிழமை காலை 7 மணி வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஜெனரல் கிளீனிங் செய்யும் நிறுவன வாகனங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டுமாறும், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றவும் ITC கேட்டுக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT