அமீரகத்தில் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பானது இன்று 300 ஐ தாண்டி பதிவாகியுள்ளது.
அமீரகத்தில் இன்று (திங்கள்கிழமை, டிசம்பர் 20, 2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த ஒரு நாளில் மட்டும் 301 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 744,438 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,152 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு நாளில் மட்டும் 149 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 738,785 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பால் அபுதாபியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை இருந்த கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, அமீரகத்தின் பிற பகுதிகளில் இருந்து அபுதாபி பயணிப்பவர்களுக்கு EDE ஸ்கேனர்கள் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்நுழைய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது முறையான கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.