ADVERTISEMENT

COVID-19: சினோஃபார்மின் புதிய தடுப்பூசிக்கு அமீரக அரசு ஒப்புதல்..!! ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்…!!

Published: 27 Dec 2021, 4:24 PM |
Updated: 27 Dec 2021, 4:32 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சினோபார்ம் CNBG இன் புதிய மறுசீரமைப்பு கொண்ட புரத தடுப்பூசியினை (Recombinant protein vaccine) அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் தரவுகளின் கடுமையான கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சினோபார்ம் CNBG-ன் இன்ஆக்டிவ் தடுப்பூசியின் (inactive vaccine) இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்ட நபர்களையும் இந்த ஆய்வில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்த புதிய வகை தடுப்பூசி கொரோனாவிற்கெதிராக சிறப்பாக செயல்படுவதாகவும் இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எவருக்கும் பக்க விளைவுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் SARS-CoV-2 வகைகளுக்கு எதிராக இந்த தடுப்பூசி மேம்பட்ட நோயெதிர்ப்பு திறனை நிரூபித்துள்ளதாகவும் விரைவான உற்பத்தி மற்றும் எளிதான சேமிப்பு மற்றும் விநியோகத்தை அனுமதிக்கும் உயர் பாதுகாப்பு விகிதத்துடன் இந்த தடுப்பூசி இருப்பதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும்போது கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு கொண்ட வைரஸ்களுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியையும் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

புதிய தடுப்பூசியின் அவசரகால பயன்பாடு அமீரகத்தின் உரிம நடைமுறைகளை விரைவாக மறுபரிசீலனை செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் சட்டங்களுடன் முழுமையாக இணங்குகிறது என்றும் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

G42 மற்றும் Sinopharm CNBG ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியான ஹயாத் பயோடெக் மூலம் இந்த புதிய தடுப்பூசி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி ஜனவரி 2022 முதல் பூஸ்டர் டோஸாக பொதுமக்களுக்குக் கிடைக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.