ADVERTISEMENT

UAE: 2,794 தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய 40 மில்லியன் திர்ஹம்ஸை தங்கியிருந்த இடத்திற்கே சென்று வழங்கிய நீதிமன்றம்…!!

Published: 26 Dec 2021, 4:29 PM |
Updated: 26 Dec 2021, 4:29 PM |
Posted By: admin

அபுதாபி தொழிலாளர் நீதிமன்றமானது நான்கு நிறுவனங்களைச் சேர்ந்த 2,794 தொழிலாளர்களுக்கு செலுத்தாமல் இருந்த 40 மில்லியன் திர்ஹம்களின் நிதி நிலுவைத் தொகையை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்கான வழக்கில் நீதிமன்றம் உடனடி சட்ட நடவடிக்கைகளை எடுத்து, அவர்களுக்குச் சாதகமாக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு இணங்க, அவர்களின் நிதி உரிமைகளை ஒப்படைத்துள்ளது. இதற்காக அபுதாபி மொபைல் கோர்ட் தொழிலாளர்கள் வசிக்கும் இடத்திற்கே நேரடியாகச் சென்று பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

அபுதாபி தொழிலாளர் நீதிமன்றம், வழக்குகளை விரைவாகத் தீர்ப்பது மற்றும் ஒரு நீதிக்காக உரிமைகோருபவர்களுக்கு நிலுவைத் தொகைகளை வழங்குவது ஆகியவை தனது அபுதாபி நீதித்துறையின் (ADJD) முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

துணைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி விவகார அமைச்சரும், அபுதாபி நீதித்துறையின் தலைவருமான மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான், நீதித்துறை அமைப்பில் நம்பிக்கையை வலுப்படுத்தும் முன்னோடி அமைப்பை உருவாக்க, இது வளர்ச்சி மற்றும் முதலீட்டு இயக்கத்தை பிரதிபலிக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அபுதாபி தொழிலாளர் நீதிமன்றம், கூட்டுப் பிரச்சனைகளைக் கையாள்வதற்கும், குறைந்த நேரத்தில் தீர்வு காண்பதற்கும் தெளிவான வழிமுறையைக் கடைப்பிடித்துள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதே போல் தொழிலாளர்களை அவர்கள் வசிக்கும் இடத்திலேயே பராமரிக்கவும், அவர்களின் முழு உரிமைகளும் கிடைக்கும் வரை அவர்களை நிறுவனத்தில் இருந்து வெளியேற்றுவதைத் தடுக்கவும், அதே போல் தொழிலாளர்கள் வசிக்க விரும்பும் தொழிலாளர்களின் குடியிருப்பை ஒருங்கிணைத்து வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் எடுக்கவும் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஐக்கிய அரபு அமீரக உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, ஒரு மேம்பட்ட நீதி அமைப்பு மூலம், முறையான சட்டத்தின் கீழ் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதன் ஒரு பகுதியாக, அனைத்து தரப்பினரும் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளைப் பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறையை செயல்படுத்துகிறது என்று தொழிலாளர் நீதிமன்றம் விளக்கியுள்ளது.