ADVERTISEMENT

அபுதாபி எரிபொருள் டேங்கர் வெடிப்பு தொடர்பாக இந்திய தூதரகம் ட்வீட்… உயிரிழந்த இந்தியர்கள் பற்றிய தகவலுக்கு அதிகாரிகளுடன் தொடர்பு…

Published: 17 Jan 2022, 6:22 PM |
Updated: 17 Jan 2022, 6:40 PM |
Posted By: admin

அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம், பெட்ரோலிய டேங்கர் வெடிப்பில் பலியான இரண்டு இந்தியர்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து “முஸாஃபாவில் இருக்கும் ADNOC இன் எரிபொருள் டேங்கர்கள் வெடித்ததில் 2 இந்திய குடிமக்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கூடுதல் விவரங்களைப் பெற சம்பந்தப்பட்ட ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் நெருங்கிய தொடர்பில் உள்ளது” என்று தூதரகம் ட்வீட் செய்துள்ளது.

மேலும் இறந்தவர்களின் அடையாளங்களைக் கண்டறிய நாங்கள் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று தூதரகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) அருகே முசாஃபா ICAD 3 பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மூன்று பெட்ரோலிய டேங்கர்கள் வெடித்ததையடுத்து இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் கொல்லப்பட்டதை காவல்துறை ஏற்கெனவே உறுதிப்படுத்தியது. அதன் பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT