ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும் என்று அரசாங்க மனித வளங்களுக்கான மத்திய ஆணையம் (FAHR) சனிக்கிழமை அறிவித்துள்ளது.
அனைத்து அமைச்சகங்களுக்கும் மத்திய அரசு நிறுவனங்களுக்கும் ஒரு புதிய FAHR சுற்றறிக்கை சனிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் ஊழியர்கள் ஒரு மாதத்திற்குள் பூஸ்டர் டோஸ் எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது அமீரகத்தின் அதிகாரப்பூர்வ Al Hosn செயலியில் குறிப்பிடப்பட்டிருக்கும் கிரீன் பாஸ் தொடர்பான சமீபத்திய மாற்றங்களைப் பின்பற்றுகிறது. இதில் அறிவிக்கப்பட்டிருக்கும் சமீபத்திய மாற்றங்கள் ஊழியர்களும் பார்வையாளர்களும் அரசாங்க அலுவலகங்களுக்கு அணுக கிரீன் பாஸ் வைத்திருப்பதைக் கட்டாயமாக்குகிறது.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்களில் 14 நாட்களுக்கு ஒருமுறை கொரோனாவிற்கான PCR சோதனையில் எதிர்மறை முடிவைப் பெறுபவர்களுக்கு கிரீன் பாஸ் நிலை தொடர்ந்து செயலில் இருக்கும்.
தடுப்பூசியிலிருந்து விலக்கு பெற்றவர்கள் ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் PCR எதிர்மறை சோதனை முடிவை வழங்குவதன் மூலம் தங்கள் கிரீன் பாஸ் நிலையைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.