இந்தியா மற்றும் இலங்கை உட்பட 12 நாடுகளில் இருந்து துபாய்க்கு பயணிக்கும் பயணிகளுக்கான சமீபத்திய வழிமுறைகளை துபாயை மையமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியா, இலங்கை போன்ற குறிப்பிட்ட நாடுகளில் இருந்து அமீரகம் பயணிக்கும் பயணிகள் 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட செல்லுபடியாகும் கொரோனாவிற்கான எதிர்மறை PCR முடிவை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா, சூடான் அல்லது ஜாம்பியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு, கொரோனாவிற்கான RT-PCR அறிக்கையில் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக அசல் அறிக்கையுடன் இணைக்கப்பட்ட QR குறியீடு இருப்பது கட்டாயமாகும்.
துபாய் விமான நிலையங்களுக்குச் சென்றதும், செக்-இன் மற்றும் துபாய் ஹெல்த் அத்தாரிட்டியின் (DHA) பிரதிநிதிகளுக்கு QR குறியீடு வழங்கப்பட வேண்டும்.
மேலும் விமானம் புறப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்குள் ரேபிட் PCR சோதனையும் மேற்கொண்டு அதற்கான அறிக்கையை பெற வேண்டும்.
இந்த வழிமுறைகள் துபாய்க்கு வருபவர்கள் மற்றும் துபாய் வழியாக பயணிப்பவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் துபாய் வந்தவுடன் மற்றுமொரு PCR சோதனை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிடத்தக்கது.