வளைகுடா செய்திகள்

ஓமான்: கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் போட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ்…!! எங்கே..?? எப்போது வரை..??

ஓமானின் வடக்கு அல் பதினா (north al batinah) கவர்னரேட்டில் உள்ள சோஹரில் இருக்கும் மறுவாழ்வு மையத்தில் வெளிநாட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கப்படும் என தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கும் இந்த சேவையானது, ஜனவரி 9, ஞாயிற்றுக்கிழமை முதல், ஜனவரி 13, 2022 வியாழன் வரை இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வடக்கு அல் பதினாவில் உள்ள சுகாதார சேவைகள் இயக்குநரகம் கூறுகையில், “கொரோனாவிற்கெதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸினையும் போட்டுக்கொண்டு குறைந்தது மூன்று மாதங்கள் கடந்த 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வெளிநாட்டினருக்கு கொரோனாவிற்கு எதிரான மூன்றாவது டோஸ் ஞாயிற்றுக்கிழமை முதல் சோஹரில் உள்ள மறுவாழ்வு மையத்தில் ஜனவரி 13 ம் தேதி வரை வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளது.

எனவே அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!