ADVERTISEMENT

‘புத்தாண்டு அனைவருக்கும் அமைதியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்’.. புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த துபாய் ஆட்சியாளர்…

Published: 1 Jan 2022, 3:53 AM |
Updated: 1 Jan 2022, 3:55 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் புத்தாண்டான 2022 ஐ வரவேற்கும் விதமாக அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த வாழ்த்து செய்தியில் அனைவருக்கும் வளமான, பாதுகாப்பான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், “அமீரகத்திற்கு கிடைத்த சாதனைகள் நிறைந்த ஒரு வருடத்தில் இருந்து நாங்கள் விடைபெறுகிறோம், வரவிருக்கும் ஆண்டு சிறந்தவையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் 2022 ஐ வரவேற்கிறோம்.” என கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக உங்களுக்கும், உங்கள் குடும்பங்களுக்கும், உங்கள் நாடுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு மனிதகுலத்திற்கு அமைதியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.