ADVERTISEMENT

துபாயில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த இனி காசு..!! ஜூலை முதல் அமல்…!!

Published: 7 Feb 2022, 6:52 PM |
Updated: 7 Feb 2022, 7:05 PM |
Posted By: admin

துபாயில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒரு புதிய கொள்கையை அரசு அங்கீகரித்துள்ளது. அதன்படி வரும் ஜூலை 1, 2022 முதல், துபாய் முழுவதிலும் உள்ள கடைகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளின் விலை 25 ஃபில்ஸ் ஆகும்.

ADVERTISEMENT

இந்த கட்டணமானது சில்லறை விற்பனை நிலையங்கள், உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் இ-காமர்ஸ் டெலிவரிகளுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. எக்சிகியூட்டிவ் கவுன்சில் அறிவித்துள்ள கொள்கையின்படி, இரண்டு ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படும் என்றும் அதற்கு முன்னதாக இந்த பைகள் பயன்படுத்துவதற்கான கட்டணம் ஒவ்வொரு கட்டமாக படிப்படியாக மதிப்பிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிளாஸ்டிக் பைகளுக்கான வரியானது துபாய் மட்டுமல்லாது 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் அத்தகைய பைகள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் பகுதியாகவோ அல்லது முழுமையானதாகவோ தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் நினைவுகூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயில் வெளியான இந்த புதிய அறிவிப்பைத் தொடர்ந்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து துறைகளிலும் வரும் வாரங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

துபாயில் பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டணம் குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து மறுபயன்பாட்டு பைகள் போன்ற நிலையான மாற்றுகளை வழங்க கடைகள் ஊக்குவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

கடந்த மாதம், அபுதாபியின் சுற்றுச்சூழல் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர், இந்த ஆண்டு இறுதிக்குள் அபுதாபியில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படலாம் என்று கூறியிருந்தார்.

பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தபகூடிய பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் கட்லரிகள் உட்பட 15 அல்லது 16 பொருட்கள் புதிய திட்டத்தின் மூலம் தடைக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

சில்லறை வர்த்தக நிறுவனமான மஜித் அல் ஃபுட்டைம் கேரிஃபோர் கடந்த ஆண்டு தனது துபாய் கிளைகளில் சிட்டிலேண்ட் மாலில் உள்ள கேரிஃபோர் ஹைப்பர் மார்க்கெட் மற்றும் அரேபியன் ராஞ்ச்ஸ் 1 இல் உள்ள கேரிஃபோர் மார்க்கெட் ஆகியவற்றின் செக்அவுட் கவுன்டர்களில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகளை வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்தது.

கடந்த பத்தாண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிளாஸ்டிக் நுகர்வு காரணமாக நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் இறந்துள்ளதாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.