வெளிநாடுகளிலிருந்து அபுதாபிக்கு பயணிக்கும் பயணிகளில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அபுதாபிக்கு வர இனி PCR பரிசோதனை செய்ய வேண்டியதில்லை என்று எதிஹாட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
இது குறித்து எதிஹாட் ஏர்வேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டில், கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அல்லது கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்ததற்கான மீட்பு சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அல்லது 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் PCR சோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது.
If Abu Dhabi is your final destination, you’ll just need to take one PCR test on arrival at Abu Dhabi airport which is free of charge.
— Etihad Airways (@etihad) February 26, 2022
மேலும் மேலே கூறப்பட்டுள்ள பயணிகள் அபுதாபி விமான நிலையத்திற்கு வந்தவுடன் இலவச கோவிட் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துளளது.
அதன் தொடர்ச்சியாக ஐக்கிய அரபு அமீரகம் வழியாக வேறு ஒரு நாட்டிற்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு, அவர்கள் சென்றடையும் நாட்டில் ஏதேனும் கொரோனா பாதுகாப்பு தொடர்பான தேவைகள் இருந்தால் தவிர வேறு எந்த பரிசோதனையும் தடுப்பூசியும் தேவையில்லை என்றும் எதிஹாட் ஏர்வேஸ் குறிப்பிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு இணையதள லிங்க் ஒன்றையும் தனது ட்வீட்டுடன் விமான நிறுவனம் பகிர்ந்துளளது.
No testing or vaccination is required for transiting the UAE, unless your final destination requires it. For more details, visit https://t.co/JUk4uE18rF
— Etihad Airways (@etihad) February 26, 2022