ADVERTISEMENT

பிக் டிக்கெட்டில் 250,000 திர்ஹம்ஸை தட்டிச்சென்ற இந்தியர்… வாராந்திர டிராவில் வெற்றி பெற்ற முதல் பெண்மணி…

Published: 2 Feb 2022, 11:30 AM |
Updated: 2 Feb 2022, 11:35 AM |
Posted By: admin

அபுதாபியில் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வரும் உலகளவில் பிரசித்தி பெற்ற பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாராந்திர டிராவையும் நிகழ்த்தி வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகையை வழங்கி வருகிறது.

ADVERTISEMENT

அதன்படி இந்த வாரத்தில் நடைபெற்ற வாராந்திர எலக்ட்ரானிக் டிராவில் குவைத்தில் வசிக்கும் இந்தியப் பெண்மணி 2 இலட்சத்து 50 ஆயிரம் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்றிருக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்த செவிலியரான சவிதா நாயர், பிக் டிக்கெட் டிரா தொகுப்பாளர் பௌச்ரா 250,000 திர்ஹம்ஸ் பரிசுத் தொகையை அவர் வென்றதாக தெரிவிக்கும் போது நம்ப முடியவில்லை எனவும் மிக அதிர்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

சவிதா இது பற்றி தெரிவிக்கையில், “எதிர்பாராத தொலைபேசி அழைப்பால் நான் ஆச்சரியப்பட்டேன். நான் முதலில் 2,500 திர்ஹம் வென்றதாக நினைத்தேன். இந்த வாரத்தின் 250,000 திர்ஹம் பரிசுத் தொகையை நான் வென்றுள்ளேன் என்று தொகுப்பாளர் கூறியபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சவிதா இரண்டு வருடங்களுக்கும் மேலாக தனது குடும்பத்துடன் இந்த பிக் டிக்கெட் வாங்கி வருவதாக தெரிவித்துள்ளார். இந்த டிரா நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்புதான் அவர் வெற்றிக்கான டிக்கெட்டை வாங்கியதாக கூறியுள்ளார்.

ADVERTISEMENT

வெற்றி பெற்ற பணத்தைப் பற்றி கூறுகையில் அவர் “பணத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும் என்பது குறித்து என்னிடம் உடனடித் திட்டங்கள் எதுவும் இல்லை. வாராந்திர ரொக்கப் பரிசுக் குலுக்கல் பற்றி எனக்கு தெரியாது. பிப்ரவரி 3ம் தேதி நடக்கும் பிக் டிக்கெட் நேரலை டிராவை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அதற்கு முன்பே நான் வென்றிருக்கிறேன்” என கூறியுள்ளார்.

மாதாந்திர டிரா சீரிஸ் 236க்கான கிராண்ட் வின்னர் 22 மில்லியன் திர்ஹம் பிப்ரவரி 3, வியாழன் அன்று அறிவிக்கப்படும் என பிக் டிக்கெட் குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த மாதம் டிக்கெட்டுகளை வாங்கிய அனைவரும் வாராந்திர மின்னணு டிராவில் நுழைந்து 500,000 திர்ஹம்ஸை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். மேலும், மார்ச் 3 ம் தேதி நடைபெறவிருக்கும் பிக் டிக்கெட் டிராவில் முதல் பரிசாக 12 மில்லியன் திர்ஹமும், இரண்டாம் பரிசாக 1 மில்லியன் திர்ஹமும் மற்றும் ஐந்து பரிசுகளும் மார்ச் 3 அன்று வழங்கப்படவிருப்பதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது