ADVERTISEMENT

பிக் டிக்கெட் வாராந்திர டிராவில் 5 இலட்சம் திர்ஹம்ஸை வென்ற இந்தியர்..!!

Published: 16 Feb 2022, 3:15 PM |
Updated: 16 Feb 2022, 3:15 PM |
Posted By: admin

பிக் டிக்கெட் அபுதாபியின் பிப்ரவரி மாதத்திற்கான இரண்டாவது வாராந்திர மின்னணு டிராவில் கத்தாரில் வசிக்கும் இந்தியாவைச் சேரந்த  கோலண்டஸ் அஹ்மத் ஷௌகத் என்பவர் 5 இலட்சம் திர்ஹம்களை பரிசுத்தொகையாக வென்றுள்ளார்.

ADVERTISEMENT

இந்த மாதம் நடைபெற்ற டிராவில் இரண்டாவது வார வெற்றியாளரான ஷௌகத், 114308 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், “நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக பிக் டிக்கெட்டுகளை வாங்கி வருகிறேன், நாங்கள் வெற்றி பெற்றோமா என்பதைப் பார்க்க ஒவ்வொரு வாரமும் எலக்ட்ரானிக் டிரா பற்றிய செய்திகளை தவறாமல் பார்க்கிறேன். இறுதியாக நாங்களும் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என கூறியுள்ளார்.

வாராந்திரக் குலுக்கலுக்கான பரிசுத் தொகை 250,000 திர்ஹமாக ஜனவரியில் வழங்கப்பட்ட நிலையில் இந்த மாதம் 500,000 திர்ஹமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 3ம் தேதி நடைபெறும் நேரடி குலுக்கல்லில் ஷௌகத் உட்பட அனைத்து வாராந்திர வெற்றியாளர்களும் கோடீஸ்வரராகும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் இம்மாதம் 500,000 திர்ஹம் பரிசை வெல்வதற்கான மேலும் இரண்டு வாராந்திர குலுக்கல்கள் நடைபெறவுள்ளன.

ADVERTISEMENT

இதனையடுத்து மார்ச் 3 ஆம் தேதி நடைபெறும் பெரிய டிராவில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசாக 12 மில்லியன் திர்ஹமும், இரண்டாவது பரிசாக 1 மில்லியன் திர்ஹமும் மற்றும் ஐந்து ரொக்கப் பரிசுகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.