ஓமானில் உள்ள அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு மார்ச் 1, 2022 அன்று இஸ்ரா வல் மிராஜ் (Isra and Mi’raj) என அழைக்கப்படும் மிஃராஜ் இரவையொட்டி அதிகாரப்பூர்வ விடுமுறையாக இருக்கும் என அரசு தற்பொழுது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், “இஸ்ரா வல் மிராஜை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை, மார்ச் 1, 2022 அன்று, நாட்டின் அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ விடுமுறையாக இருக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.