அபுதாபியில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட குடியிருப்பாளர்கள் இனி Al Hosn செயலியில் கிரீன் பாஸ் நிலையை மீண்டும் பெற PCR சோதனை எடுக்க வேண்டியதில்லை என தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொரோனாவிற்கான சோதனையில் நேர்மறை முடிவைப் பெற்றவர்கள் பச்சை நிலையைப் பெற, குடியிருப்பாளர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட, 24 மணிநேர இடைவெளியில் இரண்டு எதிர்மறையான PCR சோதனை முடிவுகளை வழங்க வேண்டியிருந்தது.
தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள ஒரு புதிய அறிவிப்பின் படி, Al Hosn செயலியில் உள்ள சிவப்பு நிலையானது 11 ஆம் நாள், குடியிருப்பாளர்கள் PCR சோதனைக்கு உட்படுத்தப்படாமல் தானாகவே பச்சை நிறமாக மாறும் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்த தகவலில் “10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், 11ம் தேதி தானாகவே உங்கள் குறியீடு பச்சை நிறமாக மாறும். பச்சை நிலை 30 நாட்களுக்கு இருக்கும். அடுத்த 60 நாட்களில் 14 நாட்களுக்கு ஒருமுறை PCR பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் கொரோனா சோதனையில் நேர்மறை முடிவைப் பெறுபவர்களுக்கு 90 நாட்களுக்கு தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸ் எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த விலக்கு ஒருங்கிணைந்த பயண அனுமதிச்சீட்டுக்கு பொருந்தும்.
க்ரீன் பாஸ் நிலையைப் பராமரிக்க, 14 நாட்களுக்கு ஒருமுறை PCR பரிசோதனை தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.