துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 இன் இறுதி நாளை எட்டியுள்ள நிலையில் நாளை அதிகளவு பார்வையாளர்கள் எக்ஸ்போவிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பார்வையாளர்களின் கூட்டத்தைப் பூர்த்தி செய்ய துபாய் மெட்ரோ 24 மணிநேரமும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
எக்ஸ்போ 2020 துபாயின் தலைமை நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்கு அதிகாரி தாரேக் கோஷே கருத்துப்படி, மார்ச் 31 ஆம் தேதி மக்கள் எண்ணிக்கை அதிகமிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மெட்ரோ ரயில்கள் இரவு முழுவதும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
எக்ஸ்போவின் நிறைவு விழாவானது வானவேடிக்கைகள், ஏர் ஷோ மற்றும் உலகத் தரம் வாய்ந்த கலைஞர்களுடன் முழுமையான ஒரு கண்கவர் நிகழ்ச்சியாக இருக்கும் என்றுஎக்ஸ்போ குழு உறுதியளித்துள்ளது. அத்துடன் இரவு முழுவதும் கொண்டாட்டங்கள் தொடரும் என்றும் இதில் நள்ளிரவு மற்றும் எக்ஸ்போ 2020 துபாய் அதன் நுழைவு போர்ட்டல்களை இறுதி முறையாக மூடுவதற்கு முன் அதிகாலை 3 மணிக்கும் வான வேடிக்கைகள் நிகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து நிகழ்வு நடைபெறும் இடங்களும் குறைந்த திறன் கொண்டதாக இருக்கும் மற்றும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளானது எக்ஸ்போ தளத்தில் உள்ள மாபெரும் ஸ்க்ரீன்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.