ADVERTISEMENT

சிறைகைதிகளுக்கு விடுதலை அளிக்க ஷார்ஜா ஆட்சியாளர் உத்தரவு..!! ரமலானை முன்னிட்டு நடவடிக்கை ஏற்பாடு..!!

Published: 29 Mar 2022, 5:22 PM |
Updated: 29 Mar 2022, 5:28 PM |
Posted By: admin

அமீரகத்தின் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜா ஆட்சியாளருமான மாண்புமிகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்கள், புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு 210 சிறைகைதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இது மன்னிப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியாளரின் மனிதாபிமான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சைகை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைக்கைதிகள் வாழ்க்கையில் சிறந்து விளங்கவும், புதிதாக வாழ்க்கையைத் தொடங்குவதற்கும் வாய்ப்பளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் இந்த மன்னிப்பு கைதிகளை ஊக்குவிக்கும் மற்றும் அவர்கள் சிறந்த வாழ்க்கையை வாழ உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ரமலான் மாதத்திற்கு முன்னதாக கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் நடைமுறை ஆண்டுதோறும் குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதே போல் அமீரக ஜனாதிபதி மற்றும் துபாய் ஆட்சியாளரும் ரமலான் மாதத்தை முன்னிட்டு சிறைகைதிகளுக்கு விடுதலை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.