ADVERTISEMENT

ரமலானை முன்னிட்டு 540 சிறைக்கைதிகளை விடுவிக்க உத்தரவிட்ட அமீரக ஜனாதிபதி..!!

Published: 28 Mar 2022, 3:41 PM |
Updated: 28 Mar 2022, 3:43 PM |
Posted By: admin

அமீரகத்தில் புனித ரமலான் மாதம் வரவிருப்பதை முன்னிட்டு 540 கைதிகளை சிறை தண்டனையில் இருந்து விடுவிக்க ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த செயலானது மன்னிப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியின் மனிதாபிமான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

அத்துடன் சிறைக்கைதிகள் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்கவும், புதிதாக வாழ்க்கையைத் தொடங்குவதற்கும் வாய்ப்பளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் ஒவ்வொரு வருட ரமலானின் போதும் சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவது வழமையாகவே நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.