ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு துபாயில் உள்ள 659 கைதிகளை சீர்திருத்த மற்றும் தண்டனை மையங்களில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
சிறைகைதிகளுக்கு இரண்டாவது வாய்ப்பளித்து, அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு உதவும் துபாய் ஆட்சியாளரின் ஆர்வத்தின் ஒரு பகுதியாக இந்த சைகை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போல் அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீஃபாவும் ரமலானை முன்னிட்டு 540 சிறைகைதிகளுக்கு விடுதலை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.