அமீரக செய்திகள்

அமீரகத்தில் இந்த வருடத்தின் மீதமுள்ள பொது விடுமுறை நாட்கள் எத்தனை..??

இந்த ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில்  ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு இந்த ஆண்டு இன்னும் கிடைக்கக்கூடிய மீதமுள்ள பொது விடுமுறைகள் எப்போது என்பது குறித்த தகவல்களைக் காணலாம். அதில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தேசிய தின விடுமுறை நாட்களும் இதில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மீதமுள்ள அதிகாரப்பூர்வ விடுமுறைகளில் முதலாவது அக்டோபர் மாதம் மீலாது நபி எனும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கும் ஒரு விடுமுறை நாளாகும். இது, அக்டோபர் 8 சனிக்கிழமை அன்று வருகிறது.

சனி-ஞாயிறு என இரு நாட்கள் வாரத்தில் விடுமுறை பெறுபவர்களுக்கு இந்த விடுமுறை பலன் இல்லை என்றாலும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை நாளைக் கொண்டிருக்கும் நபர்களுக்கு இது இரண்டு நாட்கள் தொடர் விடுமுறையைத் தரும்.

இதனைத் தொடர்ந்து தியாகிகள் நினைவு தினம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தை குறிக்கும் வகையில் பொது விடுமுறை அளிக்கப்படும். அதன்படி டிசம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய மூன்று நாட்கள் பொது விடுமுறை நாட்களாகும். அத்துடன் டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால், குடியிருப்பாளர்கள் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையைப் பெறலாம்.

இதுவே இந்த வருடத்தின் மீதமுள்ள பொது விடுமுறை நாட்களாகும். இந்த விடுமுறைகளைத் தொடர்ந்து வரும் பொது விடுமுறையானது அடுத்த வருட புத்தாண்டிற்குதான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!