அமீரக செய்திகள்
துபாய் சாலையில் திடீரென தீபிடித்து எரிந்த வாகனம்..!! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!!

துபாயில் இருக்கக்கூடிய அல் ரெபாத் ஸ்ட்ரீட்டில் பிசினஸ் பே கிராஸிங்கை நோக்கிய சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் தீப்பிடித்து எரிந்ததாக துபாய் காவல்துறையினர் தற்பொழுது தெரிவித்துள்ளனர். துபாய் காவல்துறையின் கூற்றுப்படி, ஷேக் முகமது பின் சையத் சாலையில் இருந்து பிசினஸ் பே கிராசிங் நோக்கிச் செல்லும் அல் ரெபாத் ஸ்ட்ரீட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியை நோக்கிய டிரேட் சென்டர் டனலினை அடுத்து ஷேக் சையத் சாலையில் காலை 9:56 மணிக்கு மற்றொரு விபத்தும் பதிவாகியுள்ளது. இதனையடுத்து வாகன ஓட்டிகள் கவனமாக செயற்படுமாறும், கால தாமதங்களை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.