அமீரகத்தில் 90 நாட்களுக்கான விசா சேவை நிறுத்தம்..!! காரணம் என்ன..??

அமீரகத்தில் தற்பொழுது விசா நடைமுறைகள் மாற்றப்பட்டு புதிய விசா அமைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த புதிய விசா மாற்றத்தின் காரணமாக அமீரகத்தில் வழங்கப்பட்டு வந்த 90 நாட்களுக்கான விசா சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக டிராவல் ஏஜெண்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கு பதிலாக புதிதாக 60 நாட்களுக்கான சுற்றுலா விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த விசா சேவை நிறுத்தமானது அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய இரு எமிரேட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் துபாயில் 90 நாட்களுக்கான விசா சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை துபாயில் இயங்கி வரும் டிராவல் ஏஜெண்ட் நிறுவனமான டிராவல் ஜோன் இண்டர்நேஷனல் டூரிசம் நிறுவனத்தின் உரிமையாளர் SKV ஷேக் அவர்களும் உறுதிபடுத்தியுள்ளார்.
அத்துடன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 60 நாட்களுக்கான விசா எடுப்பதற்கான செலவு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.