அமீரக செய்திகள்

UAE: சுகாதார மற்றும் பாதுகாப்பு தரங்களை கடைபிடிக்காத 3,000 லாண்ட்ரி கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை..!!

ஷார்ஜாவில் உள்ள அதிகாரிகள் ஷார்ஜாவின் பல்வேறு பகுதிகளில் சுகாதார மற்றும் பாதுகாப்பு தரங்களை பின்பற்ற தவறிய லாண்ட்ரி கடைகளின் மேல் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி ஷார்ஜாவில் உள்ள 3,000 லாண்ட்ரி கடைகளை முனிசிபாலிட்டி நிர்ணயித்த சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தரங்களைப் பின்பற்றத் தவறியதற்காக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது பற்றி சுகாதாரக் கட்டுப்பாட்டுத் துறைத் தலைவர் ருக்கையா இப்ராஹிம் கூறுகையில், ஷார்ஜா முனிசிபாலிட்டி முறையான விதிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்ய லாண்ட்ரி கடைகளில் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் தேவையான சுகாதாரத் தரங்களுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எதிராக நிர்வாக மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, லாண்ட்ரி கடைகள் முக்கிய சுகாதார மற்றும் பாதுகாப்பு நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அவை

>> துணிகளை துவைக்கும் மற்றும் உலர்த்தும் சாதனங்கள் இருக்க வேண்டும்

>> அவ்வப்போது தூய்மை மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்

>> தரைகள் முறையாக சுத்தப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

>> துணிகளுக்கு கண்டெய்னர்கள் கொடுக்கப்பட வேண்டும்

>> துணிகளை சேகரிக்க அலமாரிகள் இருக்க வேண்டும்

>> பைகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் வழங்க வேண்டும்

>> இடத்தின் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் 

>> கருவிகள் மற்றும் உபகரணங்களின் தூய்மையை உறுதி செய்தல் வேண்டும்

>> வழக்கமான பூச்சி கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டும்

>> பணியாளர்கள் உரிய சீருடை அணிய வேண்டும்

>> கடையில் முதலுதவி பெட்டி இருக்க வேண்டும்,

>> சரியான வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் இருக்க வேண்டும்

>> சுவர்கள், தரைகள் மற்றும் கூரைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்  

>> அனைத்து ஊழியர்களுக்கும் சுகாதார அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!