அமீரக செய்திகள்

எக்ஸ்போ சிட்டி துபாய் செல்ல இலவச டிக்கெட்டுகள்…!! ஆசிரியர்களுக்காக சிறப்பு சலுகை அறிவிப்பு..!!

உலக ஆசிரியர் தினத்தை கொண்டாடும் விதமாக எக்ஸ்போ சிட்டி துபாய் ஆசிரியர்களுக்கு இன்று அக்டோபர் 5 முதல் அக்டோபர் 8 வரை இலவச டிக்கெட்டுகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது. எக்ஸ்போ சிட்டி துபாயின் கல்வி மற்றும் கலாச்சாரத் தலைவர் மர்ஜான் ஃபரைடூனி கூறுகையில், “ஆசிரியர்கள் இன்றைய இளைஞர்களை எதிர்காலத்தின் தலைவர்களாகவும், கண்டுபிடிப்பாளர்களாகவும், மாற்றங்களை உருவாக்குபவர்களாகவும் உருவாக்க தூண்டுகிறார்கள்”.  

“எங்கள் நன்றியுணர்வின் இந்த சிறிய அடையாளத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களை எக்ஸ்போவில் வரவேற்க நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

எக்ஸ்போ சிட்டி துபாயானது, பல்வேறு ஆய்வுப் பயணங்கள், வொர்க்‌ஷார்ப் மற்றும் அற்புதமான அறிவியல் நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்கள் கண்டறிய, கற்றுக்கொள்ள மற்றும் விளையாடுவதற்கான வாய்ப்புகளுடன் முக்கியமான உலகளாவிய தலைப்புகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் வகையில் எக்ஸ்போ ஸ்கூல் திட்டம் என்ற ஒன்றை அறிவித்து அதன் விபரங்களையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இந்த எக்ஸ்போ சிட்டி ஸ்கூல் திட்டத்தைப் பற்றி மேலும் அறிய, www.schools.expocitydubai.com ஐப் பார்வையிடலாம் மற்றும் சமூக ஊடகங்களில் @exposchoolprogramme ஐப் பின்தொடரலாம் என கூறப்பட்டுள்ளது.

எக்ஸ்போ சிட்டி துபாய் ஒரு நாள் அட்ராக்ஷன்ஸ் பாஸின் விலை 120 திர்ஹம் ஆகும். எக்ஸ்போ துபாயின் அனைத்து முக்கிய பெவிலியன்களையும் பார்வையாளர்கள் அனுபவிக்க இது அனுமதிக்கிறது. இதற்கான டிக்கெட் ஆன்லைனில் கிடைக்கும் என்றும்  பார்வையாளர்களுக்கு விசன் பெவிலியன், வுமன் பெவிலியன், அத்துடன் டெர்ரா – தி சஸ்டைனபிலிட்டி பெவிலியன் மற்றும் அலிஃப் – தி மொபிலிட்டி பெவிலியன் ஆகியவற்றிற்கான அணுகலை இது வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக இந்த இடங்களுக்குச் செல்லலாம். ஆனால் எக்ஸ்போ சிட்டி துபாயின் டிக்கெட் கவுண்டர் ஒன்றில் அவர்கள் இந்த டிக்கெட்டைப் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்ட சர்ரியல் வாட்டர் ஃபீச்சர் (surreal water feature) மற்றும் அல் வாஸ்ல் பிளாசாவிற்கு அனைவரும் இலவசமாக சென்று பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாள் அட்ராக்ஷன் பாஸைப் பெறாத பார்வையாளர்களுக்கு, பெவிலியன் ஒன்றை பார்வையிட ஒரு நபருக்கு 50 திர்ஹம்கள் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!