அமீரக செய்திகள்

UAE: வாரத்தில் மூன்று நாட்களுக்கு உணவகங்களில் சாப்பிடும் 50%க்கும் அதிகமான அமீரகவாசிகள்..!! கணக்கெடுப்பில் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களில் சுமார் 55 சதவீதம் பேர் துபாயை உலகின் சிறந்த உணவுகளை சாப்பிடுவதற்கு உண்டான இடமாக தரவரிசைப்படுத்தியுள்ளனர் என ஒரு கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒரு கணக்கெடுப்பின்படி இந்த பிரிவில் லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களையும் விட துபாய் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

துபாயில் வசிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (52 சதவீதம்) வாரத்திற்கு மூன்று முறை வெளியில் உணவருந்துவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நியூயார்க், லண்டன், சிங்கப்பூர் மற்றும் இஸ்தான்புல்லுக்கு முன்னால், உலகத் தரம் வாய்ந்த சமையல்காரர்கள், சிறந்த உணவு மற்றும் உணவகங்களில் சிறந்த சேவை போன்ற பிரிவுகளில் துபாய் நகரமானது இரண்டாவது இடத்தில் உள்ளது.

மேலும் வருடாந்திர துபாய் சர்வதேச பார்வையாளர்கள் கணக்கெடுப்பின் (DVIS) படி, 2021 இல் கணக்கெடுக்கப்பட்ட கிட்டத்தட்ட 32,000 பார்வையாளர்களில், 72.2 சதவீதம் பேர் துபாயில் உள்ள உணவு மற்றும் உணவகங்களின் ஒட்டுமொத்த தரத்தில் மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ளனர். அத்துடன் 0.1% பேர் உணவின் தரம் திருப்திபடவில்லை என தெரிவித்துள்ளனர்.

துபாயில் சுமார் 13,000 உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் உள்ளன. இது MENA என்று சொல்லக்கூடிய மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அனைத்து நகரங்களையும் விட அதிகம் என்று கூறப்படுகிறது.

துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையால் (DET) நியமிக்கப்பட்ட ஆய்வின் ஒரு பகுதியாக சுமார் 1,730 குடியிருப்பாளர்கள் கணக்கெடுக்கப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது. மேலும் DET ஆல் நடத்தப்பட்ட முதல் காஸ்ட்ரோனமி (gastronomy) தொழில் மாநாட்டில் சிறப்பு அறிக்கை வெளியிடப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதில் 100 க்கும் மேற்பட்ட உணவகங்கள், சமையல் நிபுணர்கள் மற்றும் உணவு மற்றும் பானங்கள் துறையைச் சேர்ந்த முக்கிய பங்குதாரர்கள் கலந்து கொண்டனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் வெளியிடப்படவுள்ள இந்த அறிக்கை, துபாயின் வளர்ந்து வரும் உணவுத்துறையின் பிரிவுகளை பட்டியலிடுவதோடு, உணவகங்கள், சமையல்காரர்கள், சாத்தியமான ஒத்துழைப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் உள்ளூர் மற்றும் உலகளவில் பகிர்ந்து கொள்ள நகரத்தின் சமையல் துறையின் நுண்ணறிவுக்கான தளத்தை உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் போது, ​​துபாய் ஃபுட் ஃபெஸ்டிவலின் (DFF) 10வது ஆண்டு பதிப்பு ஏப்ரல் 18 முதல் மே 7, 2023 வரை நடைபெறும் என்றும் DET அறிவித்துள்ளது.

துபாய் நகரம் 2022 TripAdvisor டிராவலர்ஸ் சாய்ஸ் விருதுகளில் ‘உணவு பிரியர்களுக்கான’ நான்காவது முன்னணி இடமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் 50 சிறந்த உணவகங்களின் பட்டியலின் தொடக்கப் பதிப்பில் துபாயின் 16 உள்நாட்டு கஃபேக்கள், உணவு விடுதிகள், சிறந்த உணவு நிறுவனங்கள் மற்றும் சமையல்காரர்களும் அங்கீகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!