அமீரக செய்திகள்

அமீரகத்தின் கொடி நாள்: அமைச்சகங்கள், நிறுவனங்களுக்கு கொடியேற்ற அழைப்பு விடுத்த துபாய் மன்னர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரவிருக்கும் கொடி நாளை முன்னிட்டு அமீரகத்தின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அமீரகத்தின் தேசிய கொடியை ஏற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 3 ஆம் தேதி காலை 11 மணிக்கு அமீரக தேசிய கொடியை ஏற்றுமாறு அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக துணைத் தலைவர் வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரக கொடி தினம் குறித்து குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள “நமது கொடி உயர்த்தப்படும்.. நமது பெருமை மற்றும் நமது ஒற்றுமையின் சின்னம் நிலைத்திருக்கும்… நமது பெருமை மற்றும் இறையாண்மையின் பதாகை வானத்தில் உயர்ந்து நிற்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொடி தினத்தை கொண்டாடுவது ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய நிகழ்வாகும். அன்றைய நாளில் குடிமக்களும் குடியிருப்பாளர்களும் ஒன்றிணைந்து நாட்டின் கொடியை ஏற்றி, அசைப்பதன் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாதனைகள், சிறப்புகள் மற்றும் தலைமைத்துவம் குறித்து பெருமிதம் கொள்ளும் நாள் இதுவாகும்.

ஐக்கிய அரபு அமீரக கொடி பற்றிய சில முக்கிய விசயங்கள்:

>> ஐக்கிய அரபு அமீரக கொடியைப் பயன்படுத்திய முதல் நாள் டிசம்பர் 2, 1971.

>> அமீரகத்தின் தேசத்தந்தையான மறைந்த மாண்புமிகு ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் முதன் முதலில் ஐக்கிய அரபு அமீரக கொடியை ஏற்றினார்.

>> ஐக்கிய அரபு அமீரக கொடியின் நீளம் அகலத்தை விட இரு மடங்கு அதிகம்.

>> ஐக்கிய அரபு அமீரக கொடியானது அப்துல்லா முகமது அல் மைனா என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

>> அமீரக கொடி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3 அன்று கொண்டாடப்படுகிறது.

>> ஐக்கிய அரபு அமீரக கொடி நாள் முதன்முதலில் 2013 இல் தொடங்கப்பட்டது.

>> அனைத்து அரசு துறைகள் மற்றும் கட்டிடங்கள் முழுவதும் அமீரக கொடி ஏற்றப்பட்டுள்ளது.

>> ஐக்கிய அரபு அமீரக கொடி நீதி, அமைதி, சகிப்புத்தன்மை, அதிகாரம் போன்றவற்றைக் குறிக்கின்றது.

Related Articles

Back to top button
error: Content is protected !!