அமீரக செய்திகள்

அமீரகவாசிகளே.. ஒரு எமிரேட்டில் இருந்து மற்றொரு எமிரேட்டிற்கு பேருந்தில் பயணிக்க வேண்டுமா..?? உங்களுக்கான அனைத்து தகவல்களும்..!!

அமீரகத்தில் வரவிருக்கும் தேசிய தின விடுமுறை நாட்களின் போது அமீரகவாசிகள் இந்த விடுமுறை தினங்களில் பல்வேறு இடங்களுக்கு செல்லவும் தங்களது உறவினர் அல்லது நண்பர்களின் இடத்திற்கு செல்ல வேண்டியும் ஒரு எமிரேட்டில் இருந்து மற்றொரு எமிரேட் பயணிக்க வேண்டியிருக்கும். இந்த நிலையில் இருப்பவர்களுக்கு அமீரகத்தின் பொது போக்குவரத்தே சிக்கனமாகவும் அதே நேரத்தில் நாம் பயணிக்க வசதியாகவும் இருக்கும். நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால் உங்களுக்காக தான் இந்த செய்தி.

துபாயில் இருந்து மற்ற எமிரேட்டுகளுக்கு பயணம்

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மற்ற அனைத்து எமிரேட்களுக்கும், துபாயில் இருக்கக்கூடிய ஒரு சிட்டியான ஹத்தாவிற்கும் பேருந்துகளை இயக்குகிறது. இந்த பேருந்து வழித்தடங்கள் அனைத்தும் இருவழிப்பாதையாகும். எனவே துபாயில் இருந்து குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் நீங்கள் மீண்டும் இதே பேருந்து போக்குவரத்தைப் பயன்படுத்தி துபாய்க்கு வந்து சேர முடியும்.

துபாயில் இருந்து அபுதாபிக்கு இயக்கப்படும் பேருந்து சேவை 

கீழ்க்கண்ட பேருந்துகள் துபாயில் இருந்து அபுதாபிக்கும் பின் மீண்டும் துபாய்க்கு இயக்கப்படுகின்றன.

  • E100- அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து அபுதாபி மத்திய பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படுகிறது

துபாயில் இருந்து அல் அய்ன் செல்ல பேருந்து சேவை

  • E201- அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து அல் அய்னுக்கு இயக்கப்படுகிறது

துபாயில் இருந்து ஷார்ஜா செல்வதற்கான சேவை

E315- எடிசலாட் மெட்ரோ நிலையத்திலிருந்து ஷார்ஜாவின் முவைலே பேருந்து முனையத்திற்கு இயக்கப்படுகிறது

E303- யூனியன் மெட்ரோ நிலையத்திலிருந்து ஷார்ஜாவின் அல் ஜுபைல் பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகிறது

E307A -அபு ஹைல் மெட்ரோ நிலையத்திலிருந்து ஷார்ஜாவின் அல் ஜுபைல் பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகிறது

துபாயில் இருந்து அஜ்மானிற்கான சேவை

E400- யூனியன் மெட்ரோ நிலையத்திலிருந்து அஜ்மானில் உள்ள அல் முசல்லா பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகிறது

E411- துபாயின் எடிசலாட் மெட்ரோ நிலையத்திலிருந்து அஜ்மானில் உள்ள அல் முசல்லா பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகிறது

துபாயில் இருந்து ஃபுஜைரா வரையிலான சேவை

E700- யூனியன் பேருந்து நிலையத்திலிருந்து அல் ஹ்லைஃபத்தில் உள்ள புஜைரா பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படுகிறது

துபாய் முதல் ஹத்தா வரையிலான சேவை

E16- சப்கா பேருந்து நிலையத்திலிருந்து ஹத்தா பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகிறது

துபாயில் இருந்து மற்ற எமிரேட்ஸ் செல்லும் பேருந்து நேரத்தை எவ்வாறு கண்டறிவது

ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் இரண்டிற்கும் கிடைக்கக்கூடிய RTA இன் S’hail செயலி, துபாயில் இருந்து மற்றும் மற்ற எமிரேட்டுகளில் இருந்து துபாய் வரும் சமீபத்திய பேருந்து அட்டவணையை சரிபார்த்து தங்கள் பயணத்தைத் திட்டமிட பயணிகளை அனுமதிக்கிறது. பயணத்திற்கான பேருந்து கட்டணமானது நேரம் மற்றும் வழிகளைப் பொறுத்து மாறுபடும். உங்கள் இலக்கை அடைய, துபாயில் நீங்கள் செல்லக்கூடிய பேருந்து, மெட்ரோ, டிராம் அல்லது ஆப்ரா (அல்லது பிற கடல் போக்குவரத்து விருப்பங்கள்) பற்றிய விவரங்களையும் இந்த அப்ளிகேஷன் வழங்குகிறது.

ஷார்ஜாவிலிருந்து மற்ற எமிரேட்டுகளுக்கு பயணம்

ஷார்ஜாவிலிருந்து மற்ற எமிரேட்டுக்கு இன்டர் எமிரேட் பேருந்தில் நீங்கள் செல்லலாம். இந்த பேருந்து சேவை மூலம் துபாய், அபுதாபி, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குவைன், ஃபுஜைரா ஆகிய எமிரேட்டுகளுக்கு பயணிக்கலாம். ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (SRTA) இன்டர்சிட்டி பேருந்துகளுக்கான நேரம் மற்றும் டிக்கெட் கட்டணங்கள் உட்பட பேருந்துகளுக்கான அட்டவணையைக் கண்டறிய, https://eforms.srta.gov.ae/eforms/BusSchedule.aspx?Route=Intercity&StopFrom=54&StopTo=55 என்ற லிங்கில் சென்று பார்வையிடலாம்.

அஜ்மானில் இருந்து மற்ற எமிரேட்களுக்கு பயணம்

அஜ்மான் போக்குவரத்து ஆணையம் அஜ்மானிலிருந்து துபாய், ஷார்ஜா, அபுதாபி, உம் அல் குவைன் மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய  எமிரேட்டுகளுக்கு இடையேயான பேருந்து சேவையை இயக்குகிறது. அஜ்மான் போக்குவரத்து ஆணையத்தின் https://ta.gov.ae/en/bus-schedules  என்ற இணைப்பைப் பார்வையிடுவதன் மூலம் எமிரேட்டுகளுக்கு இடையேயான பயணத்திற்கான பேருந்து அட்டவணையைக் கண்டறியலாம்

இருப்பினும், இணையதளத்தில் உள்ள நேரங்களும் இடங்களும் மாறக்கூடும் என்பதால் உங்கள் பயணத்தைத் திட்டமிடும் முன், அஜ்மான் போக்குவரத்து ஆணையத்தை 600599997 என்ற எண்ணில் தொடர்புகொள்வது அறிவுறுத்தப்படுகிறது. அஜ்மானில் உள்ள அனைத்து நகரங்களுக்கிடையிலான பேருந்துகளும் ஷேக் அப்துல்லா பின் ரஷித் அல் நுவைமி ஸ்ட்ரீட்டில் உள்ள பிரதான பேருந்து நிலையமான அல் முசல்லா பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுகின்றன.

பிரதான பேருந்து நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில் இருந்து டிக்கெட்டை வாங்கலாம் அல்லது பயணத்திற்கான கட்டணம் செலுத்த பொது பேருந்து அட்டையான மசார் பயன்படுத்தலாம்.

அஜ்மானில் இன்டர்சிட்டி பஸ் கட்டணம்

அஜ்மானில் இருந்து பயணிக்க பொதுப் பேருந்துகளைப் பயன்படுத்தும்போது செலுத்தப்பட வேண்டிய டிக்கெட் கட்டணங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அபுதாபி

• மசார் கார்டு (Masaar card) உள்ளவர்கள்: 30 திர்ஹம்ஸ்

• மசார் கார்டு இல்லாதவர்கள்: 35 திர்ஹம்ஸ்

துபாய்

• மசார் கார்டு உள்ளவர்கள்: 15 திர்ஹம்ஸ்

• மசார் கார்டு இல்லாதவர்கள்: 19 திர்ஹம்ஸ்

ஷார்ஜா

• மசார் கார்டு உள்ளவர்கள்: 5 திர்ஹம்ஸ்

• மசார் கார்டு இல்லாதவர்கள்: 9 திர்ஹம்ஸ்

ஷார்ஜா தொழில்துறை பகுதி

• மசார் கார்டு உள்ளவர்கள்: 6 திர்ஹம்ஸ்

• மசார் கார்டு இல்லாமல்: 10 திர்ஹம்ஸ்

உம் அல் குவைன்

• மசார் கார்டு வைத்திருப்பவருக்கு: 10 திர்ஹம்ஸ்

• மசார் கார்டு இல்லாதவர்கள்: 15 திர்ஹம்ஸ்

ராஸ் அல் கைமா

• மசார் கார்டு உள்ளவர்கள்: 20 திர்ஹம்ஸ்

• மசார் கார்டு இல்லாதவர்கள்: 25 திர்ஹம்ஸ்

ராஸ் அல் கைமாவிலிருந்து மற்ற எமிரேட்டுகளுக்கு பயணம்

ராஸ் அல் கைமாவில் உள்ள இன்டர்சிட்டி பேருந்துகள் ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையத்தால் (RAKTA) இயக்கப்படுகின்றன. மற்றும் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், அல் அய்ன், உம் அல் குவைன் ஆகிய எமிரேட்டுகளுக்கு இயக்கப்படுகின்றன. ராஸ் அல் கைமாவிலிருந்து அனைத்து நகரங்களுக்கு இடையேயான பேருந்துகளும் பிரதான பேருந்து நிலையமான அல் ஹம்ரா பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுகின்றன.

டிக்கெட் செலவு

  • ராஸ் அல் கைமா முதல் அபுதாபி மத்திய பேருந்து நிலையம் விலை: 47 திர்ஹம்ஸ்
  • ராஸ் அல் கைமா முதல் துபாயில் உள்ள யூனியன் மெட்ரோ நிலையம் வரை விலை: 27 திர்ஹம்ஸ்
  • ராஸ் அல் கைமா முதல் ஷார்ஜாவில் உள்ள அல் ஜுபைல் பேருந்து நிலையம் விலை: 27 திர்ஹம்ஸ்
  • ராஸ் அல் கைமா முதல் அஜ்மானில் உள்ள அல் முசல்லா பேருந்து நிலையம் விலை: 20 திர்ஹம்ஸ்
  • ராஸ் அல் கைமா முதல் அல் அய்ன் மத்திய பேருந்து நிலையம் விலை: 47 திர்ஹம்ஸ்
  • ராஸ் அல் கைமா முதல் உம் அல் குவைனில் உள்ள சலாமா சூப்பர் மார்க்கெட் வரை செலவு:  15 திர்ஹம்ஸ்

ராஸ் அல் கைமாவில் இன்டர்சிட்டி பேருந்துகளுக்கான பேருந்து டிக்கெட்டை எப்படி வாங்குவது

அல் ஹம்ராவில் உள்ள பிரதான பேருந்து நிலையத்திலோ அல்லது ஆன்லைனில் RAKTA இணையதளம்– rakta.gov.ae மூலமாகவோ டிக்கெட்டை வாங்கலாம். ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்குக் கிடைக்கும் ‘RAKTA’ செயலியிலும் இந்தச் சேவை கிடைக்கிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!