அமீரக செய்திகள்

UAE: இந்த விதிமுறையை மீறினால் 500 திர்ஹம் அபராதம்..!! வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் காவல்துறை..!!

அமீரகத்தின் சாலைகளில் இருக்கும் சிக்னல் சந்திப்புகளில் (intersection) உள்ள மஞ்சள் கட்டத்திற்குள் (yellow box) வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும், போக்குவரத்து சிக்னல்களை கடப்பதற்காக வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள், அதனை தவிர்க்குமாறும் அபுதாபி காவல்துறையினர் வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளனர்.

சாலையில் இருக்கும் இன்டர்செக்‌ஷனின் மையத்தில் மஞ்சள் கட்டத்திற்குள் வாகனத்தை நிறுத்துவது அல்லது போக்குவரத்து சிக்னல் வரவிருப்பதை தவிர்ப்பதற்காக வேகமாக வாகனத்தை ஓட்டி செல்வது போன்றவை மற்ற திசையில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுடன் மோதுவதற்கான அபாயத்தை விளைவிக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அபுதாபி காவல்முறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகத்தின் இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் முகமது தாஹி அல் ஹமிரி, மஞ்சள் கட்டத்திற்குள் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ஏற்படும் அபாயத்தை எடுத்துரைத்துள்ளார். வாகன ஓட்டிகள், வெளியேறும் பாதையில் (exit) வாகனங்கள் இருக்கும் வரை அப்பகுதிக்குள் வாகன ஓட்டிகள் நுழையக்கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபுதாபியின் போக்குவரத்து சட்டம் இந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தினால் 500 திர்ஹம் அபராதம் விதிக்கும் என தெரிவித்துள்ளது. அபுதாபியில் உள்ள பெரும்பாலான சந்திப்புகளில் (intersection) உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் இந்த பகுதியும் கண்காணிக்கப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!