அமீரக செய்திகள்

UAE: எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து செல்வதற்கான வழிமுறைகளை வெளியிட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்..!!

துபாயை மையமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் எலக்ட்ரானிக் சாதனங்களைக் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் 15க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், அவற்றை முறையாக பேக் செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு சாதனமும் தனித்தனியாக பேக் செய்யப்பட வேண்டும் என்றும், இந்த எண்ணிக்கையை மீறினாலும் சரியாக பேக்கேஜ் செய்யப்படாமல் இருந்தாலும் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்யலாம் என்றும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில், “பயணிகள் 15 க்கும் மேற்பட்ட தனிப்பட்ட மின்னணு சாதனங்களை (PED-personal electronic devices) எடுத்துச் செல்லவோ அல்லது செக்-இன் செய்யவோ கூடாது என்பதை நினைவூட்டப்படுகிறார்கள். தனிப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் தனித்தனியாக பேக்கேஜ் செய்யப்பட வேண்டும், மேலும் டேப் ஒட்டவோ அல்லது வேறு எலக்ட்ரிக்கல் பொருளுடன் இணைக்கப்படவோ கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “பாதுகாப்பு காரணங்களுக்காக, அதிகாரிகள் மோசமான பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களையோ அல்லது எடுத்துச் செல்லும் பொருட்களின் எண்ணிக்கை ஒரு பயணிக்கு 15 PEDs என்ற வரம்பை மீறினாலோ அவற்றை பறிமுதல் செய்யலாம்” என கூறப்பட்டுள்ளது. விடுமுறை காலம் தொடங்கும் சமயமாக இருப்பதால், ​​விமானப் பயணிகளின் போக்குவரத்து கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவுறுத்தல்களை விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

எமிரேட்ஸ் விமான நிறுவனமானது டிசம்பரில் துபாய் வழியாக உள்வரும் மற்றும் வெளியேறும் பயணங்களுக்கான பிஸியான பயணக் காலத்தை அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் தங்கள் விமானம் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக, லித்தியம் உலோகம் உள்ளிட்ட பேட்டரிகள், மற்றும் பவர் பேங்க்கள் போன்ற சாதனங்களின் பேட்டரிகள் ஷார்ட் சர்க்யூட்டைத் தவிர்க்க தனித்தனியாகப் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!