அமீரக செய்திகள்

துபாய்: பார்க், துபாய் ஃப்ரேம் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்கள் செயல்படும் நேரங்களில் திருத்தம்..!! முனிசிபாலிட்டி அறிவிப்பு..!!

துபாய் முனிசிபாலிட்டியானது 51வது ஐக்கிய அரபு அமீரக தேசிய தின கொண்டாட்டத்தின் போது துபாய் எமிரேட்டில் உள்ள பொது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கான திருத்தப்பட்ட செயல்பாட்டு நேரத்தை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் அல் முஷ்ரிஃப் நேஷனல் பார்க், சஃபா பார்க், ஜபீல் பார்க், க்ரீக் பார்க் மற்றும் மம்சார் பார்க் உட்பட அனைத்து பொது பூங்காக்களும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், அனைத்து குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இருக்கும் பூங்காக்கள் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிவிப்பில் “துபாய் நகராட்சி தேசிய தினத்தின் போது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் செயல்படும் நேரத்தை புதுப்பித்துள்ளது. புதிய இயக்க நேரத்தின்படி குடியிருப்பாளர்கள் தங்கள் வருகைகளைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என கூறப்பட்டுள்ளது.

மற்ற முக்கிய பொது பொழுதுபோக்கு இடங்கள் செயல்படும் நேரங்கள்:

துபாய் ஃபிரேம் – காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை

துபாய் சஃபாரி பார்க் – காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

தி சில்ட்ரென்ஸ் சிட்டி – திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை

லேக் பார்க்ஸ் – காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை

குடியிருப்பு பகுதியில் இருக்கும் பூங்காக்கள் – காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை

Related Articles

Back to top button
error: Content is protected !!