அமீரக செய்திகள்

அமீரகத்தில் வரும் தொடர் விடுமுறை: மிகவும் பிஸியாகும் துபாய் ஏர்போர்ட்..!! பயணிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு..!!

அமீரகத்தில் வரும் தொடர் விடுமுறையின் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையமானது வரும் நாட்களில் மிகவும் பிஸியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு விமான நிலையம் மிக பிஸியாக இருக்கும் என்பதால் துபாயை மையமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், பயணிகளுக்கு சில வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் பயணிகள் தங்கள் விமானங்களுக்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்குச் செல்லுமாறும், செக்-இன் நடைமுறைகளை முடிக்க பல ஸ்மார்ட் சேவைகளைப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தின விடுமுறை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு  விமான நிலையம் பிஸியாக இருப்பதால், அதிகளவு பயணிகளை விமான நிலையம் காணும் என எதிர்பார்க்கப்படுவதாக விமான நிறுவனம் வெளியிட்ட ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

விமானத்திற்கு மூன்று மணிநேரம் முன்னதாக பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதுடன் கூடுதலாக, தடையற்ற பயண அனுபவத்திற்கான கீழ்க்கண்ட சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

1. எமிரேட்ஸ் அப்ளிகேஷனில் அனைத்தையும் திட்டமிடுங்கள்

பயணிகள் தங்களது அனைத்து விமான விவரங்களையும் பெறுவதற்கு எமிரேட்ஸ் செயலியை தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதன் மூலம் பயணிகள் விமானங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம், பெரும்பாலான இடங்களுக்கு டிஜிட்டல் போர்டிங் பாஸைப் பெறலாம் மற்றும் இன்னும் பல சேவைகளை இந்த அப்ளிகேஷன் வழங்குகிறது

2. லக்கேஜ்களை முன்கூட்டியே செக்-இன் செய்தல்

துபாயில் இருந்து புறப்படும் பயணிகள் தங்கள் லக்கேஜ்களை விரைவிலேயே செக்-இன் செய்து கொள்ளலாம். இதன்படி விமானம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு விமான நிலையத்தில் தங்கள் லக்கேஜ்களை செக் இன் செய்து விட்டு, பின்னர் விமான நிலையத்திற்கு வந்து நேரடியாக இமிகிரேஷனுக்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

3. ஆன்லைனில் செக் இன் சேவை

ஆன்லைன் செக்-இன் விருப்பத்தைப் பயன்படுத்தி அனைத்து பயணிகளும் தங்கள் விமானத்திற்கு 48 மணிநேரம் முன்னதாக ஆன்லைனில் செக்-இன் செய்யலாம். செக் இன் செய்து கொண்ட பயணிகள் பின்னர் விமான நிலையத்தில், பிரத்யேக பேக்கேஜ் டிராப் டெஸ்க்களில் தங்கள் லக்கேஜ்களை இறக்கிவிட்டு டிஜிட்டல் போர்டிங் பாஸைப் பதிவிறக்குவது எளிது.

அஜ்மானில் இருந்து தங்கள் பயணங்களைத் தொடங்குபவர்கள் அஜ்மான் மத்திய பேருந்து முனையத்தில் 24 மணிநேர நகர செக்-இன் வசதியைப் பெறலாம்.

4. சுய செக்-இன் கியோஸ்க்களைப் பயன்படுத்தவும்

விமான நிலையத்தில் ஒருமுறை விரைவாகவும் எளிதாகவும் செய்யக்கூடியது சுய செக்-இன் கியோஸ்க்குகள். பயணிகள் ட்ச் ஸ்க்ரீன் கியோஸ்கில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி செக்-இன் செயல்முறையை முடிக்கலாம் அல்லது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தி தொடாமலேயே கியோஸ்க்கை இயக்கலாம்.

5. ஸ்மார்ட்கேட்ஸ்

பயணிகள் விமான நிலையத்திலுள்ள ஸ்மார்ட் கேட்ஸை பயன்படுத்தி செயல்முறையை இன்னும் எளிதாக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!