அமீரக செய்திகள்

பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு 2023 ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்ட அமீரகம்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் இந்த வருடத்தின் இறுதி பொது விடுமுறை நாட்களாக தேசிய தின விடுமுறை நாட்களை கொண்டாட்டங்களுடன் இன்னும் ஓரிரு நாட்களில் அனுபவிக்க உள்ளோம். இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகமானது வரவிருக்கும் 2023 ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவையானது 2023 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ விடுமுறைகளை பொது மற்றும் தனியார் துறைகளுக்கு அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் குடியிருப்பாளர்கள் அடுத்த ஆண்டு ஆறு நாட்கள் நீண்ட விடுமுறை உட்பட பல விடுமுறைகளும் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில், பொது மற்றும் தனியார் துறைகளுக்கான ஒருங்கிணைந்த பட்டியலானது அரசு மற்றும் தனியார் துறை என இரு துறைகளிலும் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சமமான விடுமுறை நாட்களை உறுதி செய்கிறது. அரசாங்கத்தால் வெளிடப்பட்டுள்ள ஒரு பதிவின்படி, அடுத்த ஆண்டுக்கான விடுமுறைகளின் முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

விடுமுறை பட்டியல்

ஆங்கில புத்தாண்டு: ஜனவரி 1

ஈத் அல் ஃபித்ர்: ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை (4 அல்லது 5 நாட்கள்)

அரஃபா நாள்: துல்ஹஜ் 9

ஈத் அல் அதா: துல் ஹஜ் 10-12

ஹிஜ்ரி புத்தாண்டு: ஜூலை 21

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்: செப்டம்பர் 29

ஐக்கிய அரபு அமீரக தேசிய தினம்: டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3

இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடுமுறைகள் ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டவை என கூறப்பட்டுள்ளது. இந்த நாட்களுமன் தொடர்புடைய ஆங்கில மாத தேதிகள் பிறை பார்ப்பதைப் பொறுத்தது என கூறப்பட்டுள்ளது.

நீண்ட வார இறுதி நாட்கள் உத்தியோகபூர்வ பட்டியலின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியிருப்பாளர்கள் அடுத்த ஆண்டு நான்கு நீண்ட வார இறுதிகளில் உள்ளனர்.

நீண்ட விடுமுறை நாட்கள்

ஈத் அல் பித்ர்:

இஸ்லாமிய நாட்காட்டியின்படி, ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வானியல் கணக்கீடுகளின்படி, இது ஏப்ரல் 20 வியாழன் முதல் ஏப்ரல் 23 ஞாயிற்றுக்கிழமை வரை இருக்கும். இருப்பினும் உண்மையான தேதிகள் பிறை பார்ப்பதைப் பொறுத்து இருக்கும்.  

அரஃபா தினம் மற்றும் ஈத் அல் அதா:

இது பெரும்பாலும் ஆறு நாட்கள் விடுமுறையை வழங்கும். வானியல் கணக்கீடுகளின் படி ஜூன் 27 செவ்வாய்க் கிழமை முதல் ஜூன் 30 வெள்ளி வரை விடுமுறை இருக்கும். இது உண்மையாக இருந்தால், சனி-ஞாயிறு விடுமுறை உள்ளவர்களுக்கு ஆறு நாட்கள் வார விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய புத்தாண்டு:

இது ஜூலை 21 வெள்ளிக்கிழமை அன்று வரவிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை உள்ளவர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை கிடைப்பதை உறுதி செய்யும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்:

செப்டம்பர் 29ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இந்த நாள் வருவதால் இந்த விடுமுறையும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை உள்ள குடியிருப்பாளர்களுக்கு மற்றொரு மூன்று நாள் தொடர் விடுமுறையை கிடைக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!