அமீரக செய்திகள்

UAE: மிகப்பெரிய பரிசுத்தொகையை அறிவித்துள்ள பிக் டிக்கெட்..!! வெற்றி பெறும் நபருக்கு 35 மில்லியன் திர்ஹம்ஸ்..!!

அபுதாபியில் நடத்தப்படும் மிகப் பெரிய ராஃபிள் டிராவான பிக் டிக்கெட்டானது இதுவரை இல்லாத மிகப்பெரிய ரொக்கப் பரிசை தற்பொழுது அறிவித்துள்ளது. அதன்படி பிக் டிக்கெட்டின் அடுத்த டிராவில் முதல் பரிசு வெல்லும் அதிர்ஷ்டசாலி 35 மில்லியன் திர்ஹம்களை பரிசுத்தொகையாக பெறுவார் என கூறப்பட்டுள்ளது.

வரவிருக்கும் அடுத்த டிராவிற்கான டிக்கெட்டுகளை வாங்கும் எவரும் ஜனவரி 3 ஆம் தேதி இந்தத் தொகையை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் அதே சமயத்தில் அவர்கள் வாராந்திர மின்னணு டிராவில் ஒவ்வொரு வாரமும் 1 கிலோ (24 காரட்) தங்கத்தைப் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கூடுதலாக, இரண்டாவது பரிசுத் தொகையாக 1 மில்லியன் திர்ஹம் அறிவிக்கப்படும் என்றும் மூன்று அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் தலா 100,000 திர்ஹம்களை பரிசுத்தொகையாக பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

பிக் டிக்கெட் ரசிகர்கள் 3 ம் தேதி இரவு 7.30 மணிக்கு அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் அரைவல் பகுதிக்கு அருகில் நடைபெறும் இலவச வெளிப்புற நிகழ்வில் கலந்துகொள்வதன் மூலமோ அல்லது பிக் டிக்கெட்டின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மற்றும் புதிய பேஸ்புக் பக்கத்திலோ டிராவைப் பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் டிரீம் கார் டிக்கெட்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்களில் வெற்றி பெறுபவர்கள் ஜனவரி 3 அன்று ஆடம்பரமான மஸராட்டி காரை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் ஒவ்வொன்றும் 150 திர்ஹம்ஸ் செலவாகும்.

இந்த பிக் டிக்கெடினை வாங்க பிக் டிக்கெட் இணையதளம் மூலம் ஆன்லைனிலோ அல்லது அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் அய்ன் விமான நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டர்களிலோ வாங்கிக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!