அமீரக செய்திகள்

துபாயின் சில முக்கிய சாலைகளில் இன்று மதியம் முதல் கால தாமதம் ஏற்படும்..!! RTA அறிவிப்பு..!!

துபாயில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட சாலைகளில் இன்று (சனிக்கிழமை) மதியம் முதல் தாமதம் ஏற்படும் என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இந்த போக்குவரத்து எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் துபாய் உலகக் கோப்பை இன்று, மார்ச் 25 ஆம் தேதி தொடங்குவதால் வாகன ஓட்டிகளுக்கு தாமதம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக துபாயில் உள்ள அல் மேதான் ஸ்ட்ரீட், அல் கைல் ரோடு மற்றும் துபாய்-அல் அய்ன் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மதியம் 1 மணி முதல் நள்ளிரவு வரை போக்குவரத்தில் தாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் ஓட்டுநர்கள் முன்கூட்டியே புறப்பட்டு மாற்று வழிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று RTA தெரிவித்துள்ளது.

மேதான் ரேஸ்கோர்ஸில் நடைபெறும் துபாய் உலகக் கோப்பை போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த 126 குதிரைகள் மொத்தம் $30.5 மில்லியன் பரிசுத் தொகைக்கு போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!