அமீரக செய்திகள்

ஈத் அல் ஃபித்ர் சனிக்கிழமையா..?? சர்வதேச வானிலை மையம் கூறுவது என்ன..??

அபுதாபியில் உள்ள சர்வதேச வானியல் மையம் (International Astronomy Centre), இஸ்லாமியர்களின் பண்டிகைத் திருநாளான ஈத் அல் ஃபித்ரின் முதல் நாளானது ஏற்கெனவே கணித்துள்ளதை விட ஒரு நாள் தாமதமாக வரும் என்று, அதாவது ஏப்ரல் 22 ஆம் தேதி வானில் தோன்றும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.

வானியல் கணக்கீடுகளின் படி, இந்த தேதி கணிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் மட்டுமே ஈத் தேதியின் சரியான தேதி உறுதிப்படுத்தப்படும் என்றும் வானியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

ரமலான் மாத இறுதியில், ஏப்ரல் 20 ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் வானில் ஷவ்வால் பிறையை எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள். ஆனால், தற்பொழுது மையத்தின் கணிப்பின்படி, அரபு நாடுகளில் எந்த இடத்திலிருந்தும் ஏப்ரல் 20 அன்று அதை பார்க்க முடியாது என கூறப்பட்டுள்ளது.

மையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், வியாழனன்று லிபியாவில் தொடங்கி மேற்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளைத் தவிர, பெரும்பாலான அரபு நாடுகளில் பிறையை  கண்டறிவது சாத்தியமில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் பிறையைக் கண்டறிய துல்லியமான தொலைநோக்கி தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வானிலை நிலைமை போன்றவை சாதகமாக இருந்தால் மட்டுமே பிறையைக் காண முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறிப்பிடப்பட்ட சூழ்நிலைகள் தவிர அரபு நாடுகளில் எங்கிருந்தும் பிறை பார்க்க வாய்ப்பில்லை என்றும் இதனால், ஈத் அல் பித்ர் ஏப்ரல் 22 சனிக்கிழமையன்று நிகழும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வியாழன் அன்று பிறையைக் கண்டால் உடனடியாக தெரிவிக்குமாறு சர்வதேச வானியல் மையம் மக்களை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், வியாழன் பிறை தென்படவில்லையென்றால் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பைக் கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஈத் அல் ஃபித்ர் சனிக்கிழமை இருக்கும் என்று மையம் மேலும் கூறியுள்ளது.

இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) அதிகாரப்பூர்வமான ஈத் அல் பித்ர் விடுமுறையை ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை ஐந்து நாட்களுக்கு அறிவித்துள்ளது. பிறையானது ஏப்ரல் 20 வியாழன் அன்று தென்படவில்லையென்றால் ஈத் அல் ஃபித்ர் ஏப்ரல் 22 அன்று கொண்டாடப்படும். இதனால், அமீரக குடியிருப்பாளர்களுக்கு ஐந்து நாள்  விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!