ADVERTISEMENT

அமீரகத்தில் உயர்ந்த எரிபொருள் விலை.. ஜூன் மாத விலைப்பட்டியல் வெளியீடு..!!

Published: 31 May 2026, 12:02 PM |
Updated: 31 May 2026, 12:02 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயம் செய்யும் குழுவானது ஜூன் மாதத்திற்கான எரிபொருள் விலைப்பட்டியலை அறிவித்துள்ளது. Opec மற்றும் பரந்த Opec+ கூட்டணியிலிருந்து மே 1, 2026 முதல் ஐக்கிய அரபு அமீரகம் வெளியேறியதை தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஜூன் மாதத்திற்கான எரிபொருள் விலைப்பட்டியல் வெளிவந்துள்ளது. இந்த நடவடிக்கை, உற்பத்தி அளவுகளை நிர்ணயிப்பதில் நாட்டிற்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

புதுப்பிக்கப்பட்ட விலைகள்:

  • சூப்பர் 98 பெட்ரோல்: ஒரு லிட்டருக்கு 3.95 திர்ஹம்ஸ் (முந்தைய விலை 3.66 திர்ஹம்ஸ்)
  • ஸ்பெஷல் 95 பெட்ரோல்: ஒரு லிட்டருக்கு 3.83 திர்ஹம்ஸ் (முந்தைய விலை 3.55 திர்ஹம்ஸ்)
  • இ-பிளஸ் 91 பெட்ரோல்: ஒரு லிட்டருக்கு 3.76 திர்ஹம்ஸ் (முந்தைய விலை 3.48 திர்ஹம்ஸ்)
  • டீசல்: ஒரு லிட்டருக்கு 4.33 திர்ஹம்ஸ் (முந்தைய விலை 4.66 திர்ஹம்ஸ்)

புதுப்பிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலைகள் ஜூன் 1 முதல் அமலுக்கு வரும்.

ஹோர்முஸ் நீரிணை மற்றும் பரந்த மத்திய கிழக்கு மோதல் தொடர்பான இடையூறுகளால் உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட கடுமையான உயர்வைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாகவே ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் விலை ஏற்கனவே கணிசமாக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT