அபுதாபி விமான நிலையத்தில் நடைபெறும் களப் பயிற்சி!! – புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்…

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இன்று (மே.11) மாலை ஒரு களப் பயிற்சி நடத்தப்படும் என்று உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், அபுதாபி காவல்துறை மற்றும் அபுதாபி ஏர்போர்ட், கூட்டாளர்களுடன் இணைந்து, மே 11 வியாழக்கிழமை மாலை, அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பயிற்சியை நடத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருப்பதில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளின் தயார்நிலையை மதிப்பிடுவதற்காக இந்த பயிற்சி நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மாற்று வழிகளை பயன்படுத்தவும், அப்பகுதியை நெருங்குவதை தவிர்க்கவும் அபுதாபி காவல்துறையினர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். அதேசமயம், தளத்தை புகைப்படம் எடுப்பது மற்றும் தொடர்ந்து பயிற்சிகள் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.