அமீரக செய்திகள்

UAE: ‘Emirates Post’ பேரில் நடத்தப்படும் மோசடி!! குடியிருப்பாளர்களை உஷார் செய்த எமிரேட்ஸ் போஸ்ட்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் எமிரேட்ஸ் போஸ்ட்டைப் (Emirates Post) போல, போலியான SMS மற்றும் கருத்துக்கணிப்புகளில் லிங்க்கை அனுப்புவதன் மூலம் தனிநபர்களை ஏமாற்றும் மோசடி நடவடிக்கைகள் சமீபத்திய வாரங்களில் அதிகமாக பதிவாகியுள்ளது. இது குறித்து வெளியான தகவல்களின் படி, குறிப்பிட்ட SMS மற்றும் போலியான சர்வேகளில் கொடுக்கப்பட்டுள்ள மோசடி லிங்க்கை கிளிக் செய்யும்  நபர்களை ஏமாற்றி அவர்களது தனிப்பட்ட தகவல்களை வழங்கவும், அங்கீகரிக்கப்படாத ஆதாரங்களுக்கு பணம் செலுத்தவும் செய்யும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆகவே, எமிரேட்ஸ் போஸ்ட் குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்குமாறும், இதுபோன்ற மோசடிகளுக்கு பலியாகாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் ட்விட்டர் மற்றும் சமூக ஊடகங்களில் வலியுறுத்தியுள்ளது.

எமிரேட்ஸ் போஸ்ட் சமூக ஊடகங்களில் தெரிவித்ததாவது: “எமிரேட்ஸ் போஸ்ட் பதிவு செய்யப்பட்ட கணக்கு மூலம் மட்டுமே SMS அனுப்புகிறோம்” என்று குறிப்பிட்டது. ஆகவே, இது போன்ற மெஸ்ஸேஜ்களில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கில் உள்நுழைவதை தவிர்க்குமாறு எமிரேட்ஸ் போஸ்ட் குடியிருப்பாளர்களிடம் கூறியுள்ளது.

மோசடி மெஸ்சேஜ்கள்:

ஒரு நபர் பெற்ற மெஸ்சேஜில் “தவறான முகவரி தகவல் காரணமாக, உங்கள் பேக்கேஜ் கிடங்கிற்கு திரும்பி விட்டது. உங்களது சரியான முகவரியைப் புதுப்பித்து, ஷிப்பிங் டெலிவரியை மீண்டும் திட்டமிடவும்.” என்று அவரது தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. மற்றொருவர்  “உங்கள் பார்சல் தாமதமாகிவிட்டது. ஷிப்பிங்கிற்கு பணம் செலுத்த, முகவரியை விரைவில் புதுப்பிக்கவும். அப்டேட் செய்வதற்கான லிங்க்கைப் பெற, 1 என்று ரிப்ளை செய்யவும்” என்று கோரப்பட்டுள்ளது.

இதே போன்ற செய்தியைத் துபாயில் உள்ள ஒரு இல்லத்தரசி கிரேஸ் டெலா க்ரூஸ் என்பவர், பெற்றிருக்கிறார். மேலும் அவர் ஒரு பேக்கேஜை  எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால், அந்த மோசடிச் செய்தி அவருக்கு எந்தவித சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே, அவர் தனது விவரங்களையும், கிரெடிட் கார்டின் OTP ஐயும் உள்ளிட்டுள்ளார்.

அடுத்த நாள், பேக்கேஜ் எங்கே இருக்கும் என்று அவர் ஆவலுடன் காத்திருந்த நிலையில், பேக்கேஜ் டெலிவரியின் நிலையை அறிய அவர் ​​​​எமிரேட்ஸ் போஸ்ட்டைத் தொடர்பு கொண்டு பேசிய போது, அது ஒரு மோசடி என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். எமிரேட்ஸ் போஸ்ட் அவரிடம் கூறியதாவது: “உங்களது பெயரில் எந்த பார்சலும் பதிவு செய்யப்படவில்லை, மேலும் நீங்கள் பெற்ற மெஸ்சேஜ் போலியானது” என்றது.

எமிரேட்ஸ் தரப்பில் இருந்து கூறப்பட்ட பதிலைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த கிரேஸ் உடனடியாக தனது கணவரிடம் இது பற்றி கூறியது, அவர்கள் கிரெடிட் கார்டை முடக்க வங்கியைத் தொடர்பு கொண்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, கார்டில் சந்தேகத்திற்கிடமான கட்டணம் எதுவும் விதிக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து எமிரேட்ஸ் போஸ்ட் அதன் ட்விட்டர் பக்கத்தில் மேலும் கூறியதாவது: “ஹாட்மெயில், ஜிமெயில், யாகூ அல்லது வேறு எந்த சர்வர்கள் மூலமாகவும் நாங்கள் உங்களைத் தொடர்புகொள்ள மாட்டோம். எமிரேட்ஸ் போஸ்ட் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி எங்கள் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகள் @emiratespost.ae அல்லது @emiratesposthop.ae என முடிவடையும்.” என்று தெரிவித்துள்ளது.

மேலும், இது போன்ற மோசடி செய்திகளைப் பெற்றால், அவற்றைப் புகாரளிக்குமாறு ட்விட்டரில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, எமிரேட்ஸ் போஸ்டிலிருந்து தோன்றும் SMS செய்திகள் அல்லது மின்னஞ்சல்களை அனுப்புவது, அவசர அறிவிப்புகள் மூலம் குடியிருப்பாளர்களைக் கவர்வது போன்றவை பெருமளவில் நடக்கும் மோசடிகள் ஆகும். எனவே, குடியிருப்பாளர்கள் mailto:[email protected] அல்லது 600599999 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரளிக்குமாறு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!