அமீரக செய்திகள்

UAE: வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!! அபுதாபி நெடுஞ்சாலையில் மாற்றப்பட்டுள்ள புதிய வேக வரம்பு.. ஜூன் 4 முதல் அமல்..!!

அபுதாபியில் சர்வதேச விமான நிலையம் நோக்கி செல்லும் முக்கிய சாலையில் புதிய வேக வரம்பு அபுதாபி காவல்துறையினரால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அபுதாபியின் அல் ஃபலாஹ் பாலத்திலிருந்து அபுதாபி சர்வதேச விமான நிலையம் நோக்கி செல்லும் ஸ்வேஹான் (sweihan) சாலையில் புதிதாக வேக வரம்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளததாக தெரிவித்துள்ளனர்.

மேலும், புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த வேக வரம்பு ஜூன் 4 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த சாலையில் வேக வரம்பு 140 கிமீ வேகத்தில் இருந்து மணிக்கு 120 கிமீ ஆக மாற்றப்படும் என்று ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தின் ஒத்துழைப்புடன் அபுதாபி காவல்துறை ஜெனரல் கமாண்ட் வெளியிட்டுள்ள ஒரு கூட்டு ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த புதிய மாற்றம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்த சாலைகளில் சைன்போர்டுகள் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில், சாலைகளில் வேகவரம்புகளைக் குறைப்பது போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தும் என்று அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, சாலைகளில் செல்லும்போது, வாகன ஓட்டிகள் தங்கள் வேகத்தை கண்காணிக்கவும், அனைத்து போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்கவும் அபுதாபி காவல்துறை அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!