அமீரக செய்திகள்

அமீரகத்தில் அடுத்தடுத்து வரும் நீண்ட நாட்கள் விடுமுறை..!! எப்போது..??

ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியிருப்பாளர்கள் ஏற்கனவே ஈத் அல் ஃபித்ர் பண்டிகையில் நீண்ட வார இறுதி விடுமுறையை அனுபவித்த நிலையில், அடுத்து ஈத் அல் அதாவை முன்னிட்டு இந்த மாதம் தங்கள் இரண்டாவது மற்றும் மிக நீண்ட விடுமுறையை அனுபவிக்க உள்ளார்கள்.

அமீரக விடுமுறை பட்டியலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த ஆண்டின் மீதமுள்ள நாட்களில் ஈத் அல் அதா, ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய புத்தாண்டு மற்றும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் ஆகிய மூன்று சிறப்பு நாட்களை முன்னிட்டு, நாட்டில் உள்ள ஊழியர்கள் மூன்று நீண்ட விடுமுறைகளை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வானியலாளர்களின் கணக்கீடுகளின் அடிப்படையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் ஈத் அல் அதா விடுமுறையை இஸ்லாமிய நாட்காட்டியின் கடைசி மாதமான துல் ஹஜ் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பெறுவார்கள் என கூறப்படுகின்றது.

அதுபோல ஆங்கில நாட்காட்டியின் படி, ஜூன் 27 முதல் ஜூலை 2 வரை வார இறுதி நாள் உட்பட ஈத் அல் அதா கொண்டாடப்படும் என்று கூறப்படுகிறது. எனவே, குடியிருப்பாளர்கள் ஈத் அல் அதாவை முன்னிட்டு ஆறு நாள் விடுமுறையை அனுபவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது பிறை பார்ப்பதன் அடிப்படையிலேயே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து வரும் நீண்ட விடுமுறை ஹிஜ்ரி புத்தாண்டின் போது மூன்று நாட்கள் இருக்கும் என கூறப்படுகின்றது. புதிய இஸ்லாமிய ஆண்டைக் கொண்டாடும் வகையில், ஜூலை 21 வெள்ளிக்கிழமை பொது விடுமுறை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது, அதாவது ஊழியர்களுக்கு இரண்டு நாள் வார விடுமுறை அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையினை சேர்த்தால் மூன்று நாள் விடுமுறை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி நீண்ட விடுமுறை நபிகள் நாயகம் (ஸல்) முன்னிட்டு செப்டம்பர் 29, 2023 வெள்ளிக்கிழமை அன்று, மூன்று நாள் விடுமுறை வழங்கப்படும் என்றும் இதனையடுத்து, டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அமீரக தேசிய தினத்திற்கான விடுமுறை தொடர் விடுமுறையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!