அமீரக செய்திகள்

UAE Box Office ஐ தெறிக்கவிட்ட தளபதி விஜயின் ‘LEO’.. 4 நாட்களில் 3 லட்சம் பேர் படம் பார்த்து சாதனை..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ (LEO)’ திரைப்படம் ஐக்கிய அரபு அமீரகத்தின் திரையரங்குகளில் வெளியாகிய முதல் நான்கு நாட்களிலேயே சுமார் 300,000 அட்மிஷன்களுடன் UAE பாக்ஸ் ஆஃபிஸை தெறிக்கவிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அக்டோபர் 19 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிகப் பிரம்மாண்டமாக வெளியான ‘லியோ’ திரைப்படம், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 22 வரை சுமார் 300,109 அட்மிஷன்களுடன் வசூல் வேட்டையில் அதிரடி காட்டி வருவதாக அமீரகத்தில் படத்தை ரிலீஸ் செய்த விநியோகஸ்தர் ஃபார்ஸ் ஃபிலிம் (Phars Film) நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ‘லியோ’ ஆரம்பத்திலேயே அமீரகத்தில் இப்படி ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டைக் கொடுத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும், லியோவிற்கு அடுத்ததாக ஆங்கில திரைப்படமான Leonardo DiCaprio’s நடித்திருக்கும் ‘Killers Of The Flower Moon’ படத்தை 24,367 பேர் பார்த்திருப்பதாகவும் Phars Film Group இன் தலைவர் அஹ்மத் கோல்சின் கூறியுள்ளார்.

இந்தியாவை போன்றே அமீரகத்திலும் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணி முதல், தளபதி விஜய் ரசிகர்களின் ஆரவாரத்துடன் லியோ திரைப்படத்தின் FDFS நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. மேலும் அமீரகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட 1,000 காட்சிகளுக்கும் மேல் லியோ திரைப்படம் அமீரக திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

தற்போது, UAE முழுவதும் லியோ திரைப்படத்தை வெளியிட்ட பார்ஸ் ஃபில்ம் (Phars Film) நிறுவனம் வெளியிட்டுள்ள விபரங்களின் படி, லியோ திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் அமீரகத்தில் மட்டும் 15 மில்லியன் திர்ஹம்ஸிற்கு மேல் (இந்திய மதிப்பில் 35 கோடி) வசூல் சாதனை புரிந்துள்ளது தெரியவந்துள்ளது.

அதாவது அமீரகத்தில் லியோ படத்திற்கான டிக்கெட்டின் விலையானது 40 திர்ஹம்ஸ் முதல் VIP டிக்கெட் 120 திர்ஹம்ஸ் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. அதில் தோராயமாக ஓரு டிக்கெட் 50 திர்ஹம்ஸ் என்றாலும், படம் பார்த்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் படத்தின் மொத்த வசூல் 15 மில்லியன் திர்ஹம்ஸை தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை திரிஷா, மடோன்னா செபாஸ்டியன், நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன், மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் என எக்கச்சக்கமான நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ள இப்படம் அமீரகத்தில் மட்டுமின்றி உலகளவிலும் பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்து வருகிறது. மேலும் இந்தப் படம் 400 கோடி ரூபாய் வசூலுடன் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்து வருவதாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!