துபாய்: பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி..!! மூன்று நாள் நடைபெறவுள்ள சூப்பர் சேல்..!!

துபாயில் எதிர்வரும் நவம்பர் 24 வெள்ளிக்கிழமை முதல் நவம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை வரை குடியிருப்பாளர்கள் பொருட்கள் வாங்கும் போது தள்ளுபடியுடன் கூடிய மூன்று நாள் சூப்பர் சேல் நடைபெற உள்ளது. இது குடியிருப்பாளர்களுக்கு எக்கச்சக்கமான ஷாப்பிங் டீல்களை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கவிருக்கிறது.
மேலும், இந்த சூப்பர் சேலில் சில்லறை விற்பனையாளர்கள் சிலர் பல தயாரிப்புகளுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், துபாய் முழுவதும் உள்ள 2,000க்கும் மேற்பட்ட கடைகளில் 500க்கும் மேற்பட்ட பங்கேற்கும் பிராண்டுகளின் தயாரிப்புகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, ஷாப்பிங் ஆர்வலர்கள் தள்ளுபடி வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கலாம்.
வருகின்ற வெள்ளிக்கிழமையன்று பிளாக் ஃப்ரைடேயுடன் தொடங்கும் இந்த மூன்று நாள் சூப்பர் சேலில் குடியிருப்பாளர்கள் துபாயில் உள்ள மால்கள் மற்றும் ஷாப்பிங் சென்டர்களில் உள்ள கடைகளில் இன்னும் சிறப்புச் சலுகைகளைக் கண்டறியலாம் என்று விசிட் துபாய் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தமாதம் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஷாப்பிங் சீசனின் தொடக்கத்தைக் குறிக்கும் பிளாக் ஃப்ரைடேயுடன் கடைகள் பல்வேறு தள்ளுபடிச் சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்த சூப்பர் சேல் ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும் மற்றும் இதில் வாழ்க்கை முறை, எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், அழகு மற்றும் ஹோம்வேர் தயாரிப்புகள் போன்ற பல பொருட்கள் தள்ளுபடியுடன் மலிவான விலையில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel