அமீரக செய்திகள்

அபுதாபியில் இருந்து செல்லும் பயணிகளுக்கு இலவச சிட்டி செக்-இன் சேவை.. புதிய ஏர்போர்ட் திறப்பை முன்னிட்டு சிறப்புச் சலுகை..!!

அபுதாபியில் நீண்ட நாட்களாக கட்டப்பட்டு வந்த அதிநவீன சர்வதேச விமான நிலையமான டெர்மினல் A அண்மையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 15ம் தேதி முதல் அபுதாபியில் இருந்து இயங்கி வந்த அனைத்து விமான நிறுவனங்களும் புதிய டெர்மினலில் இருந்து முழுமையாகச் செயல்படவும் தொடங்கிவிட்டன.

அந்த வகையில், இப்போது புதிய டெர்மினல் A திறக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக சில பயணிகளுக்கு இலவச சிட்டி செக்-இன் சேவைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, Etihad Airways விமானங்களில் பயணிக்கும் பயணிகள் இந்த இலவசச் சேவையைப் பெறலாம் என்று சிட்டி செக்-இன் சேவைகளை இயக்கும் மொராஃபிக் ஏவியேஷன் சர்வீசஸ் (Morafiq Aviation Services) அறிவித்துள்ளது.

மொராஃபிக்கின் சிட்டி செக்-இன் இடங்கள்:

  • அபுதாபி குரூஸ் டெர்மினல் (24 மணி நேரமும் செயல்படும்)
  • அபுதாபி நேஷனல் எக்சிபிஷன் சென்டர் (காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்)

எதிஹாட் பயணிகளுக்கான இந்த இலவச செக்-இன் சலுகையானது வரும் டிசம்பர் 14ம் தேதி வரை மட்டும் கிடைக்கும் என்று மொராஃபிக் ஏவியேஷன் சர்வீசஸ் தெரிவித்துள்ளது. பயணிகள் இந்த சிட்டி செக்-இன்களில் தங்களின் லக்கேஜ் நடைமுறைகளை முடிப்பதன் மூலம், சிரமம் இல்லாமல் விமான நிலையத்தின் டெர்மினல் A இல் ஸ்கிரீனிங் மற்றும் போர்டிங் செயல்முறையை தடையின்றி அனுபவிக்க முடியும்.

அதுமட்டுமின்றி, இலவச, விசாலமான பார்க்கிங் இடமும் சிட்டி செக்-இன் இடங்களில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது. இதை ஏர் அரேபியா, விஸ் ஏர் மற்றும் எகிப்து ஏர் ஆகியவற்றில் பறக்கும் பயணிகள் அனைவரும் அணுகலாம். இங்கு வயதான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 35 திர்ஹம், சிறுவர்களுக்கு 25 திர்ஹம் மற்றும் குழந்தைக்கு 15 திர்ஹம் என செக்-இன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

குறிப்பாக, பயணிகள் தங்கள் விமானம் புறப்படுவதற்கு 4 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்கு முன்னதாக தங்கள் லக்கேஜ்களை இங்கே விட்டுச் செல்லலாம். மேலும் இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு, 800 667 2347 அல்லது +971 2 583 3345 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!