ADVERTISEMENT

இந்தியர்களுக்கு இலவச UAE விசா: 30 நாட்கள் வரை தங்கலாம்.. எப்படி பெறுவது?

Published: 12 Aug 2026, 1:31 PM |
Updated: 12 Aug 2026, 1:39 PM |
Posted By: Menaka

இந்தியாவிலிருந்து அபுதாபிக்குச் செல்லத் திட்டமிடுபவர்களுக்காகவே, ஒரு புதிய சுற்றுலாத் திட்டத்தின் கீழ், அபுதாபியில் குறைந்தது மூன்று இரவுகள் தங்கும் விடுதி முன்பதிவை மேற்கொள்ளும் தகுதியுள்ள இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு கட்டணமின்றி இலவசமாக விசா வழங்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு அமீரகத்துக்குச் சுற்றுலா செல்ல மற்றொரு சிறப்பான வாய்ப்பை அளிக்கிறது.

ADVERTISEMENT

இதன் மூலம் அபுதாபியில் விடுமுறையைக் கழிக்கத் திட்டமிடும் இந்திய சுற்றுலாப் பயணிகள், தகுதியான விடுமுறைத் தொகுப்பை (holiday package) முன்பதிவு செய்யும்போது 30 நாள் UAE டூரிஸ்ட் விசாவை வழங்கும் புதிய இலவச விசா திட்டத்தைப் பயன்படுத்தி விசா கட்டணத்தை கணிசமாக சேமிக்கலாம்.

அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையால் (DCT Abu Dhabi) தொடங்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டம், ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 31, 2026 வரையிலான பயணங்களுக்குப் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இத்திட்டத்தின் கீழ், இதில் பங்கேற்கும் 11 பயண முகவர் நிறுவனங்கள் (travel partners) மூலம் குறைந்தது மூன்று இரவுகள் தங்கும் வகையிலான அபுதாபி விடுமுறைப் பயணத்தை முன்பதிவு செய்யும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், சுமார் 285 திர்ஹம்ஸ் மதிப்புள்ள 30 நாள் சுற்றுலா விசாவைப் பெறலாம்.

இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம், ஆரம்பத்தில் 20,000 இலவச விசாக்கள் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பங்கேற்கும் நிறுவனங்கள்

இந்தியப் பயணிகள், கீழ்காணும் பங்கேற்கும் நிறுவனங்கள் மூலம் தகுதியான அபுதாபி விடுமுறைப் பயணத்தை முன்பதிவு செய்ய வேண்டும்:

  • Holiday Tribe
  • Thomas Cook & SOTC
  • Thrillophilia
  • Akbar Holidays
  • Utazzo.com
  • Kesari Tours
  • Riya Travels
  • Royal Tours
  • PickYourTrail
  • MakeMyTrip
  • Aaryan Leisure

இந்த இலவச விசா, மேற்கூறிய நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் தகுதியான அபுதாபி விடுமுறை முன்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இலவச விசாவுக்கு யார் தகுதியானவர்கள்?

எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள பங்கேற்கும் பயண முகவர் நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றின் மூலம் தகுதியான அபுதாபி விடுமுறைப் பயணத்தை முன்பதிவு செய்யும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இந்தச் சலுகை கிடைக்கும். இருப்பினும், இந்த விடுமுறைத் தொகுப்பில் அபுதாபியில் குறைந்தபட்சம் மூன்று இரவுகள் தங்குவது கட்டாயமாகும்.

ஒவ்வொரு பயணியும் திட்டத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில், ஒரு குடும்பம் அல்லது முன்பதிவுக்கு இத்தனை விசாக்கள் தான் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

சுற்றுலாப் பயணிகள் எப்போது பயணம் செய்யலாம்?

இத்திட்டம் ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 31, 2026 வரையிலான பயணங்களுக்குப் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவே பயணக் காலமாகும். அதாவது, சுற்றுலாப் பயணிகள் தங்கள் தகுதியான பயணத்தை அக்டோபர் 31-க்குள் முடிக்க வேண்டும்.

ஆகவே, அக்டோபர் 31-க்கு முன் ஒரு பேக்கேஜை முன்பதிவு செய்தாலோ அல்லது விசாவைப் பெற்றாலோ மட்டும் பயணியின் தகுதி உறுதியாகிவிடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உண்மையான பயணம் திட்டத்தின் காலக்கெடுவுக்குப் பிறகு நடந்தால் அது தகுதியாகாது.

விசா தானாகவே கிடைக்குமா?

இல்லை. தகுதியான ஹாலிடே பேக்கேஜை முன்பதிவு செய்வது விசா அங்கீகாரத்தை தானாகவே உறுதிப்படுத்தாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அனைத்து விண்ணப்பங்களும் UAE இமிக்ரேஷன் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. மேலும் அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும். விசா விண்ணப்பங்களும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான செயலாக்க கால அட்டவணைகளைப் பின்பற்றும். இந்த முன்னோட்டத் திட்டத்தின் கீழ் தனியான விரைவுச் செயலாக்கக் காலம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

விசா செலவு எவ்வாறு ஈடுசெய்யப்படும்?

பங்கேற்கும் பயணக் கூட்டாளர்கள், DCT அபுதாபியால் நியமிக்கப்பட்ட ஒரு இலக்கு மேலாண்மை நிறுவனத்துடன் (Destination Management Company – DMC) இணைந்து பணியாற்றலாம், இதில் விசா செலவு நேரடியாக ஈடுசெய்யப்படும், அல்லது தங்களின் தற்போதைய DMC கூட்டாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றலாம்.

பிந்தைய நிலையில், வழங்கப்படும் ஒவ்வொரு விசாவுக்கும் DCT அபுதாபி தோராயமாக 285 திர்ஹம்ஸ் திருப்பிச் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபருக்குப் பிறகும் இந்தத் திட்டம் தொடருமா?

இந்த இலவச விசா முயற்சி தற்போது ஒரு முன்னோட்டத் திட்டமாக உள்ளது மற்றும் அக்டோபர் 31 வரை செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

பயணக் காலத்திற்குப் பிறகு, இந்தத் திட்டத்தை நீட்டிப்பதா அல்லது மாற்றுவதா என்பதை முடிவு செய்வதற்கு முன், DCT அபுதாபி இந்தத் திட்டத்தின் முடிவுகளை மதிப்பீடு செய்யும் என்று கூறப்படுகிறது.

மேற்கூறிய அனைத்து நிபந்தனைகள் மற்றும் இமிகிரேஷன் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டால், இந்தியப் பயணிகளுக்கு, ஒரு குறுகிய அபுதாபி விடுமுறையை 30-நாள் இலவச அமீரக சுற்றுலா விசாவுடன் இணைக்கும் வாய்ப்பை இந்த முயற்சி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel